For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

SONY ரிலீஸ் செய்த புது வியரபில் ஏர் கண்டிஷனர்! ஆஹா இத்தனை சிறப்பம்சங்களா? விலை என்ன தெரியுமா?

05:27 PM May 05, 2024 IST | Mari Thangam
sony ரிலீஸ் செய்த புது வியரபில் ஏர் கண்டிஷனர்  ஆஹா இத்தனை சிறப்பம்சங்களா  விலை என்ன தெரியுமா
Advertisement

SONY நிறுவனம் புதிதாக ஸ்மார்ட்போன் சைசில் இருக்கும் புதிய வியரபில் ஏர் கண்டிஷனர் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது கழுத்துடன் மாட்டிக்கொள்ள ஏற்ற வகையில் சிறியதாக இருக்கும் கூலிங் டிவைசாகும்.

Advertisement

கோடை காலம் துவங்கியதில் இருந்தே வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கிறது. வெளியில் செல்லும் மக்கள், சூரியனின் தாக்குதலில் இருந்து தப்பிக்க கையேடு ஒரு குடையை எடுத்து செல்வார்கள். இல்லனா, வேலை பணிக்காக வெளியில் செல்லும் மக்கள் இப்போது கையேடு குடையை எடுத்து செல்வதற்கு பதிலாக கூலிங் ஃபேன், நெக்பேண்ட் ஃபேன், போர்ட்டபிள் மினி ஏசி போன்ற மினி சைஸ் கூலிங் கேட்ஜெட்களை எடுத்து செல்கின்றனர்.

அந்த வகையில், இந்த ஆண்டின் சூட்டை தணிக்க உதவும் ஒரு புதிய வியரபில் ஏர் கண்டிஷனர் சாதனத்தை சோனி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதை சோனி நிறுவனம் சோனி ரியான் பாக்கெட் 5 (Sony Reon Pocket 5) என்ற பெயருடன் அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு வித்தியாசமான கூலிங் டிவைஸ் ஆகும். மனித உடலுடன் ஒட்டி வெப்பத்தை தணிக்க அனுமதிக்கும் சிறிய வகை ஏசி (AC) சாதனம் இது.

நீங்கள் அணியும் சட்டை அல்லது டி-ஷர்ட் உள்ளே இரண்டு சிறிய கம்பி போன்ற சாப்ட் பாரை தோள்பட்டை வழியாக கழுத்தின் அருகில் அமர்வது போல இந்த டிவைஸை உடம்புடன் பொறுத்த வேண்டும். உடல் வெப்பம் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள வெப்பத்திற்கு ஏற்றவாறு இந்த சோனி ரியான் பாக்கெட் 5 கூலிங் சாதனம் கூலிங் காற்றை கொண்டு வெப்பத்தை தணித்து கூலிங்காக உணரச் செய்கிறது. இந்த சோனி ரியான் பாக்கெட் 5 சாதனம் இன்றைய வெப்பமயமான காலகட்டத்திற்கு ஏற்ற சாதனம் என்று சோனி நம்புகிறது.

இதில் பல வகை சென்சார்கள் மற்றும் ஏர் இன்லெட், ஏர் அவுட்லெட் போன்ற சிறப்பான விஷயங்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக இதன் மைய பகுதியில் ஒரு பெரிய மெட்டல் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் பகுதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி தான் உங்கள் பின்னங்கழுத்தில் கூலிங்கை வழங்கி உங்களை உடனே குளிர்ச்சியடைய செய்கிறது. ஏர் வென்ட் மூலம் குளுமையான காற்று வேகமாக வெளியேற்றப்படுகிறது.

அதுமட்டுமல்ல, இது சம்மர் சீஸனில் ஏசியாகவும், குளிர் காலத்தில் ஹீட்டர் சாதனமாகவும் செயல்படுகிறது. ஆம், சிம்பிளாக சொல்ல வேண்டுமென்றால், இது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல, கூலிங் மற்றும் ஹீட்டர் சாதனமாக வந்துள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.14,000 விலை முதல் துவங்குகிறது.

இது மே 15ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இது அமேரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் விற்பனைக்கு வருகிறது. விரைவில் இந்திய சந்தைக்கும் இது கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags :
Advertisement