சொந்த வீடு கட்டணுமா..! 600 சதுர அடியில் வீடு கட்ட எவ்வளவு செலவாகும்..! முழு விவரம்..!
அனைவருக்கும் சொந்த வீடு கட்ட வேண்டும் என ஆசை இருக்கும். சொந்த வீடு பற்றி பல கனவுகள் இருக்கும். அப்படி சொந்த வீடு கட்ட நினைக்கிறவங்களின் பல நாள் கனவு இப்போ நிறைவேறப்போகுது. 600 சதுர அடியில் எப்படி வீடு கட்டலாம் அதற்கான செலவுகள் குறித்து தான் இப்போ பார்க்க போறோம்.
600 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு மொத்தமாக 320 சிமெண்ட் மூட்டை தேவைப்படுகிறது. ஒரு சிமெண்ட் மூட்டையின் விலை 400 ரூபாய் என்றால் 320 சிமெண்ட் மூட்டையின் விலை தோராயமா ஒரு லட்சத்து 28,000 ரூபாய் ஆகும்.
அதேபோல், 600 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு மொத்தமாக 15 யூனிட் மணல் தேவைப்படும். 1 யூனிட் மணல் 6 ஆயிரம் ரூபாய் என்றால் 15 யூனிட் மணல் தோராயமாக 90 ஆயிரம் ரூபாய் ஆகும். அதே, M சாண்ட் பயன்படுத்தினால் 10 யூனிட் தேவைப்படும். இதற்கு தோராயமாக 50 ஆயிரம் ரூபாய் தான் ஆகும். மேலும், P சாண்ட் பயன்படுத்தினால் 5 யூனிட் மட்டுமே தேவைப்படும், இதற்கு தோராயமாக 30 ஆயிரம் ரூபாய் செலவாகும்.
அடுத்து, 600 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு 3/4″ ஜல்லி 9 யூனிட்டும், 11/2″ ஜல்லி 3 யூனிட்டும் ஜல்லி தேவைப்படும். இதற்கு 40 ஆயிரம் ரூபாய் செலவாகும்.
600 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு மொத்தமாக 2 ஆயிரத்து 700 கிலோ ஸ்டீல் தேவைப்படும். 1 கிலோ ஸ்டீல் 75 ரூபாய் என்றால் 2,700 கிலோ ஸ்டீல் வாங்குவதற்கு தோராயமாக 2 லட்சம் ரூபாய் செலவாகும். இதேபோல்,
12,500 செங்கல் தேவைப்படுகிறது. 1 செங்கல்லின் விலை 7 ரூபாய் 50 பைசா என வைத்து கொண்டால் 12,500 செங்கல் வாங்குவதற்கு தோராயமாக 93 ஆயிரம் ரூபாய் செலவாகும்.
இதேபோல், கிராவல், எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங், மரப்பொருட்கள் மற்றும் டைல்ஸ் என மொத்தமாக பொருட்களின் செலவு மட்டுமே பார்த்தால் 7 லட்சத்து 86,000 ரூபாய் ஆகும். மேலும், வேலையாட்களின் சம்பளம் உள்ளிட்டவை சேர்த்தால் 4 லட்சம் முதல் 4 அரை லட்சம் வரை ஆகும். எனவே, 600 சதுர அடியில் வீடு கட்ட மொத்தமாக 11.5 லட்சம் முதல் 12 லட்சம் வரை தோராயமாக செலவாகும். வீடு கட்டுவதற்கு ஒரு ஐடியா வந்துருச்சா அடுத்து வேலையை ஸ்டார்ட் பண்ணுங்க.
read more.... எம்ஜிஆரை ஆண்மையற்றவர் என பேசியதே திமுக தான்’..!! ’சண்டாளன் என்றால் சமூகமா’..? ’எனக்கு தெரியாது’..!! சீமான் பரபரப்பு பேட்டி..!!