முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"சாவுர வயசுல உனக்கு கள்ளக்காதல் கேக்குதா??" மருமகளுடன் சேர்ந்து, மாமியார் செய்த காரியம்...

son-was-killed-by-his-mother-and-wife
06:11 PM Nov 22, 2024 IST | Saranya
Advertisement

திருச்சி சஞ்சீவி நகர் வடமல்லி தெருவை சேர்ந்தவர் 52 வயது காமாட்சி. இவருக்கு 34 வயதில் குணசேகரன் என்ற மகனும், 30 வயதில் சுலோசனா என்ற மருமகளும் உள்ளனர். திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்நிலையில், குணசேகரன் தினமும் குடித்துவிட்டு தாய் மற்றும் மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். வழக்கம்போல், நேற்று அதிகாலையும் குணசேகரன் குடித்து விட்டு தாய் மற்றும் மனைவியிடம் தகராறு செய்து விட்டு தூங்கியுள்ளார். சிறிது நேரத்தில், குணசேகரன் மயங்கி கிடப்பதாக கூறி அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

Advertisement

சம்பவம் குறித்து அறிந்த கோட்டை போலீசார், குணசேகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த அறிக்கையில் காலி சிரிஞ்சில் வெறும் காற்றை உடலில் செலுத்தியும், கழுத்தை நெரித்தும் குணசேகரன் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் குணசேகரனின் தாய் மற்றும் மருமகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் காமாட்சிக்கு, பூசாரி தெருவை சேர்ந்த விஜயகுமாருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மகன் தன்னை குடித்து விட்டு துன்புறுத்துவதாக கள்ளக்காதலனின் உறவினர்கள் விக்கி(எ)நித்தியானி, குபேந்திரன்(எ)நெல்பியா என்ற திருநங்கைகளிடம் கூறியுள்ளார்.

இதனால் கள்ளக்காதலனும், 2 திருநங்கைகளும் குணசேகரனை கொல்ல திட்டமிட்டனர். அதன்படி நேற்று போதையில் தூங்கும் குணசேகரருக்கு, 3 பேரும் ஊசியில் (சிரிஞ்ச்) வெறும் காற்றை ஏற்றி குணசேகரனின் உடலில் செலுத்தினார். பின்னர் 3 பேரும் சேர்ந்து சுடிதார் துப்பட்டாவால் குணசேகரனின் கழுத்தைநெரித்து கொலை செய்துள்ளனர். மேலும், யாரும் வருகிறார்களா என பார்க்க தாயும், மனைவியும் வாசலில் நின்று நோட்டமிட்டுள்ளனர். பின்னர் எதுவும் நடக்காதது போல், குணசேகரன் மயங்கி கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் முன்பு நாடகமாடிவிட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதையடுத்து தாய், மனைவி உள்பட 5 பேரையும் போலீசார் இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருந்தை உள்ளிழுப்பது போல், வெறும் ஊசியை உள்ளிழுத்தால், அதனுள் காற்று புகுந்து விடும். அதை உடலில் செலுத்தினால், ரத்தம் உறைந்து உயிர் போகும் அபாயம் உள்ளது. மேலும், "சாவுர வயசுல உனக்கு கள்ளக்காதல் கேக்குதா" என்று அக்கம் பக்கத்தினர் காமாட்சியையும், உடந்தையாக இருந்த மருமகளையும் பேசி வருகின்றனர்..

Read more: இனி திரையரங்கில், ரசிகர்களை பேட்டி எடுக்க கூடாது!!! தயாரிப்பாளர் சங்கத்தினரின் பரபரப்பு கடிதம்…

Tags :
Illicit Relationshipinvestigationmothermurdertransgender
Advertisement
Next Article