முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அப்பா கைய பிடிக்கனும்னு ஆசைய இருக்கு..!! அந்த சிரிப்பு.. இன்னும் மறக்க முடியல!! - தேம்பி தேம்பி அழுத விஜய பிரபாகரன்

Son Vijay Prabhakaran tearfully spoke about Vijayakanth saying that I can't forget my father, I want to hold his hand, which made the audience teary-eyed.
04:43 PM Sep 15, 2024 IST | Mari Thangam
Advertisement

கோவை சிங்காநல்லூரில் தேமுதிக முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த விழாவில் விஜயகாந்தின் மகனும் கட்சியின் இளைஞரணி செயலாளருமான விஜய பிரபாகரன் கலந்து கொண்டு பேசினார். அவர் தனது தந்தை குறித்து பேசிய போது மேடையிலேயே கண்ணீர் விட்டு பேசியதை பார்த்த தொண்டர்களும் பெண்களும் கண் கலங்கினர்.

Advertisement

அவர் பேசுகையில், தேமுதிகவை நீங்கள் தூக்கி எறிந்தாலும் சுவற்றில் அடித்த பந்து போல் மக்களுக்கு வந்து உதவி செய்து கொண்டே இருப்போம். தேமுதிக மத, இன, மொழி, பாகுபாடு பார்க்காத கட்சி. அனைத்து மொழிகளையும் கற்றுக் கொள்வதில் தவறில்லையே நான் அரசியலுக்கு வந்திருப்பதால் வாரிசு அரசியல் என கூறுவதை ஏற்க முடியாது. என்னை மற்ற பெற்றோர்களை போல எனது பெற்றோர்களும் நன்றாக படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும். திருமணம் செய்து வைக்க வேண்டும் என ஆசைப்பட்டார்கள். ஆனால் விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கட்சி தொண்டர்கள் என்னை கட்சி பணிக்கு அழைத்தார்கள்.

எனது வாழ்க்கை முழுவதையும் கட்சிக்காகவும் தொண்டர்களுக்காகவும் அர்ப்பணித்துவிட்டேன். கேப்டன் மறைவுக்கு பிறகு அந்த கட்சி இல்லாமல் போய்விடும் என எண்ணினார்கள். மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். இந்த கட்சியை இந்த நிமிடம் வரை எங்கள் தொண்டர்களுக்காக பிரேமலதா விஜயகாந்த் நடத்திக் கொண்டிருக்கிறார். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், இன்று இருக்கும் ஆட்சியாளர்களில் எந்த பெண் தலைவரும் தமிழகத்தில் இல்லை. தமிழகத்தில் இருக்கும் ஒரே ஒரு பெண் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் மட்டும்தான் என்றார்.

தொடர்ந்து, கேப்டனின் சிரிப்பு இன்று வரை என்னால் மறக்க முடியாது. என் அப்பா கையை பிடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ஏன் இதை சொல்கிறேன் என்றால், கேப்டன் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போது நாங்கள் சின்ன பசங்க, அவருக்கு உடல்நிலை சரியில்லாத போது , நாங்கள் வளர்ந்து விட்டதால் அவரை ஒவ்வொரு வினாடியும் எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் நினைத்தது எங்கள் குடும்பத்தினருக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்கும் தெரியாது. நல்லவர்கள் லட்சியம், வெல்வது நிச்சயம். அது என்றுமே தோற்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.

Read more ; 500 பணியிடங்கள்.. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் வேலை..!! ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..

Tags :
covaiVijay Prabhakaranvijayakanth
Advertisement
Next Article