முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மதுவால் மீண்டும் ஒரு மரணம்.! குடிக்க பணம் தர மறுத்த தந்தை கொலை.! மகன் வெறி செயல்.!

02:40 PM Feb 21, 2024 IST | 1newsnationuser4
Advertisement

லக்னோவில் மதுபானம் வாங்க பணம் தர மறுத்த வயதான தந்தையை, மகன் சுத்தியலால் அடித்துக் கொலை செய்துள்ளார். அவரை கைது செய்த காவல்துறையினர், இது குறித்த விசாரணையை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement

லக்னாவில் உள்ள இந்திரா நகரில் குஷி ராம் சைனி என்ற 70 வயது முதியவர், தனது மகனான ஹேமந்த் சைனியுடன் அவர்களது வீட்டின் தரை தளத்தில் வசித்து வந்தார். ஹேமந்த் ஷைனியின் மூத்த மகன் ரிங்கு, அதே வீட்டின் முதல் தளத்தில் வசித்து வந்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை ஹேமந்த் தனது தந்தையிடம், மதுபானம் வாங்குவதற்காக பணம் கேட்டுள்ளார். அவர் பணத்தை தர மறுக்கவே, இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சத்தம் கேட்டு ரிங்கு மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து பார்த்தபோது, இருவரும் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருந்தனர். இது வழக்கமாக நடக்கும் என்பதால், சின்ன சண்டை தான் என்று நினைத்த ரிங்கு மறுபடியும் முதல் தளத்திற்கு சென்றார்.

சில மணி நேரம் கழித்து ரிங்கு கீழே இறங்கி வந்த போது, தனது தாத்தா, ரத்த வெள்ளத்தில் தரையில் கிடப்பதை கண்டார். இது குறித்து தனது தந்தையான ஹேமந்திடம் கேட்டபோது, அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். அந்த அறையின் ஒரு ஓரத்தில் ரத்தக் கறை படிந்த சுத்தியலை கவனித்த ரிங்கு, அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் உடனடியாக ரிங்கு காவல்துறையைத் தொடர்பு கொண்டு, நடந்த சம்பவத்தை பற்றி கூறினார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், இறந்த முதியவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் கொலை செய்த ஹேமந்தை கைது செய்து விசாரித்த போது, தான் வேலை இல்லாமல் இருப்பதாகவும், மதுபானம் வாங்குவதற்காக பணத்தை பிச்சை எடுப்பதாகவும் தந்தை கூறியதால், ஆத்திரமடைந்து இந்த கொலையை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார் என்று வடக்கு மண்டல கூடுதல் டிஜிபி அபிஜித் சங்கர் தெரிவித்தார். வயதான தந்தையை, ஈவு இரக்கமின்றி மகனே கொன்ற இந்த சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

English summary: Son killed his elderly father for not providing money to buy liquor.

Read More: இன்று முதல் 'ISRO YUVIKA 2024'க்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.! 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அருமையான வாய்ப்பு.!

Tags :
#Murderfatherliqourlucknowpolice arrestpolice investigation
Advertisement
Next Article