முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பிணத்தை சமைத்து உண்ணும் பழங்குடியின மக்கள்.. பிறப்புறுப்பில் காளையை ஒட விடும் விநோத வழக்கம்..!!

Some tribal peoples in Africa follow different customs even today. You can see about it in this post.
05:08 PM Dec 01, 2024 IST | Mari Thangam
Advertisement

இந்த உலகில் பல்வேறு மொழிகள், இனங்கள் உள்ளன. ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் ஒவ்வொரு விதமான கலாச்சாரம் உள்ளது. பல்வேறு வினோதமான பழக்க வழக்கங்கள் உள்ளன. அந்த வகையில் வித்தியாசமான பழக்க வழக்கங்களை ஆப்பிரிக்காவில் உள்ள சில பழங்குடியின மக்கள் பின்பற்றி இன்றளவும் வருகின்றனர். அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Advertisement

இன்றளவும் பல பழங்குடியின மக்கள் வெளி உலகத்துடன் தொடர்பே இல்லாமல் இவர்களுக்கான ஒரு வாழ்க்கை நியதியுடன் காட்டு பகுதியில் நாகரீகம் அடையாமல் இன்னும் பழைய விஷயங்களையே பின்பற்றி வாழ்ந்து வருகின்றனர். இவர்களிடம் இருக்கும் வித்தியாசமான பழக்கம் வழக்கம் நமக்கே ஆச்சரியமாக இருக்கும். அந்த வகையில் மனிதனின் சடலத்தை உண்ணும் பழங்குடி மக்கள் ஆப்பிரிக்காவின் மலாவி பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களின் புனித தலத்திற்கு இறந்தவரது உடலை எடுத்துச் சென்று, சடலத்தின் தலையை வெட்டி எடுத்த பின் உடலின் உட்பகுதியை நீரால் நன்கு கழுவுகின்றனர். பின்னர் இறந்தவரின் உடலை தீயில் சுட்டு அவரது பிணத்தை சாப்பிடுவார்களாம். கூட்டமாக அந்த பிணத்தை சுற்றி அமர்ந்து அவர்கள் சாப்பிடும் போது இறந்தவர்களுக்காக பாடல் பாடிக்கொண்டே அழுதுகொண்டே ரசித்து சுவைத்து சாப்பிடுவார்களாம். அப்படியாக சாப்பிடுவது இறந்தவர்களுக்கு அவர்கள் செய்யும் மரியாதையாக அந்த மக்கள் பார்க்கின்றனர்.

சடலத்தை கழுவிய நீரிலும் சமையல் செய்து உண்கின்றனர். ஆண்கள் தங்களுக்கான மனைவியை அடைவதற்கு முன் ஒரு சடங்கு நடத்தப்படுகிறது. இது ஓர் வித்தியாசமான திருமண சடங்கு, ஆணின் பிறப்புறுப்பில் சாட்டையால் அடிக்கின்றனர். அந்த வலியைத் தாங்கிக் கொள்பவனுக்கே பெண் தரப்படும்.. இல்லையெனில் மணமகள் கிடையாது. இந்த வகையில் தான் மணமகனின் ஆண்மை சோதிக்கப்படுகிறது. சில நேரங்களில் மரணமுறும் அபாயங்களும் உண்டு.

எத்தியோப்பியாவின் ஹாமர் பழங்குடியினரைச் சேர்ந்த ஆண்கள், தங்களது ஆண்மையை நிரூபிக்க, விசித்திர பழக்கத்தை பின்பற்றினர். அதாவது ஆடையின்றி வானம் நோக்கி படுத்து, காளைகளை ஆண்களின் மேல் காளை ஒட விடுகின்றனர். தென் சூடான் மற்றும் தென்மேற்கு எத்தியோப்பிய பகுதியில் வாழ்ந்து வரும் சுர்மா பழங்குடியின பெண்களின் தோற்றம் சற்று வித்தியாசமாக இருக்கும். ஏனெனில் இந்த பழங்குடியின பெண்கள் பூப்படையும் போது, கீழ் உதட்டில் மூலிகைப் பொருட்கள் மற்றும் களிமண்ணால் செய்யப்படும் தகடு ஒன்றை பொருத்தப்படும். இது நமக்கு பயங்கரமாக காணப்பட்டாலும், அப்பெண்கள் அதை அழகாக கருதுகின்றனர்.

Read more ; டாலர் புறக்கணிப்பா? இந்தியா உட்பட பிரிக்ஸ் நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த டிரம்ப்..!!

Tags :
africaTribal
Advertisement
Next Article