இந்த இந்திய உணவுகளுக்கு வெளிநாட்டில் அதிரடி தடை..! ஏன் தெரியுமா.?
இந்தியா பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தில் சிறந்து விளங்கும் நாடாகும். இந்தியா நாட்டின் உணவு பழக்க வழக்கங்களும், பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தில் தொடர்புடையவை ஆகும். இந்தியாவில் பின்பற்றப்படும் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் உணவு பழக்க வழக்கங்களை பல வெளிநாட்டினரும் விரும்பி பின்பற்றி வருகின்றனர். ஆனால் ஒரு சில இந்திய உணவுகள் வெளிநாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. என்ன காரணம் என்பதை குறித்து பார்க்கலாம்?
1. சமோசா - பல இந்திய மக்களுக்கு பிடித்தமான உணவாக இருந்து வரும் சமோசா, சோமாலியா நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. சோமாலியா நாட்டு மக்கள் கிறிஸ்தவ மதத்தை தீவிரமாக பின்பற்றுகின்றனர். முக்கோணம் வடிவம் கிறிஸ்தவத்தை குறிக்கும் என்ற நம்பிக்கையின் பெயரினால் சமோசா உண்பதை தடை செய்துள்ளனர். அதையும் மீறி உண்பவர்களுக்கு சிறை தண்டனையும் உண்டு.
2. நெய் - பொதுவாக இந்தியர்கள் பலரும் அன்றாடம் உணவில் நெய் இல்லாமல் சாப்பிட மாட்டார்கள். நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் என்று நம்புகிறோம். ஆனால் அமெரிக்காவில் நெய் உண்பதற்கு தடை விதித்துள்ளனர். இதற்கு காரணமாக கூறப்படுவது, நெய் மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்று தடை செய்துள்ளனர்.
3. கபாப் - சைவம் மற்றும் அசைவம் இரண்டிலும் கபாப்பின் சுவை அட்டகாசமாக இருக்கும். வெனிஸ் நாட்டில் சுற்றுச்சூழல் மற்றும் பாரம்பரியங்களை பாதுகாப்பதற்காக 2017 ஆம் ஆண்டு முதல் கபாப் உண்வதற்கு தடை விதித்துள்ளனர்.
4. சவான் பிராஷ் லேகியம் - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதற்கு பல்வேறு மூலிகைகளைக் கொண்டு செய்யப்படும் லேகியம் தான் சாவான் பிராஷ். ஆனால் 2005 ஆம் ஆண்டு முதல் கனடாவில் இந்த லேகியம் தடை செய்யப்பட்டுள்ளது. இதில் ஈயம், பாதரசம் போன்ற உலோகங்கள் அதிகமாக காணப்படுகின்றன என்றும், இது உடலுக்கு மிகப்பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் தடை விதித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.