2000 ஆண்டுகள் பழமை.. இழந்ததையெல்லாம் தரும் யோக நரசிம்மர் கோயில்..!! எங்கே இருக்கு தெரியுமா..?
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளது சோளிங்கர் யோக நரசிம்மர் ஆலயம். மலையின் மீது யோக நரசிம்மர் வீற்றிருக்கிறார். மலையின் அடிவாரத்தில் உற்சவர் மட்டும் அருள்பாலிக்கிறார். இவரது பெயர் 'பக்தவச்சலப் பெருமாள்'. மலையின் ஒரு பகுதியில் யோக ஆஞ்சநேயரும் தரிசனம் தருகிறார். 108 திவ்ய தேசங்களில் 65 வது திவ்ய தேசமாக இந்த சோளிங்கர் யோக நரசிம்ம பெருமாள் உள்ளார். இங்குதான் விசுவாமித்திரரும் பிரம்மரிஷிபட்டம் பெற்றார் எனக் கூறப்படுகிறது.
இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டில் பராந்தக சோழனால் கட்டப்பட்டதால் சோழ சிம்மபுரம் என்று அழைக்கப்பட்டு பின் சோளிங்கபுரம் என்றானது. தற்பொழுது சோளிங்கர் என அழைக்கப்படுகிறது. இந்த திருத்தலத்தில் சப்தரிஷிகளுக்கு இடையூறாக இருந்த ஜோதிடர் அரக்கர்களை கொல்ல பெருமாள் ஹனுமனை அனுப்பினார். வெற்றி பெற முடியவில்லை. எனவே, தன்னிடம் இருந்த சங்கு, சக்கரத்தை கொடுத்து அரக்கனை வதம் செய்தார். பின்பு ஹனுமனும் யோக நரசிம்மரை தரிசித்து பின்பு, இங்கு யோக ஆஞ்சநேயராக இருக்கிறார்.
இங்குள்ள யோக நரசிம்மருக்கு, சூரியன், செவ்வாய், சனி ஆகிய கிரகங்கள் பெயர் கொடுக்கின்றன. இதில், சனி என்ற கிரகம் வலிமையாக உள்ளது. இக்கோயிலுக்கு படிக்கட்டு வழியே சென்று தேன், பால் மற்றும் பழம் சுவாமிக்கு அபிஷேகம் செய்து வந்தால் தனவரவு அதிகமாகும். தனவரவில் தடை ஏற்பட்டாலும் புனர்பூதோஷம் நல்லெண்ணெய் மற்றும் பன்னீர் வாங்கி கொடுத்து வந்தால் புனர்பூ தோஷ நீங்கும் திருமணம் நடந்தேறும்.
புற்றுநோயை குணமாக்கும் நரசிம்மர் : கேன்சர் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் இக்கோயிலுக்குச் சென்று நரசிம்மரையும் யோக ஆஞ்சநேயரையும் வழிபட்டு, உளுந்து வடையும் தேனும் பன்னீரும் நெய்வேத்தியம் செய்து அங்குள்ள பக்தர்களுக்கு கொடுத்தால் கேன்சர் போன்ற குறைபாடுகளில் தீர்வு கொடுக்கும்.
Read more ; சீமானுக்கு சைலண்டா ஆப்பு வைத்த நிர்வாகிகள்.. தர்மபுரியில் கூட்டோடு விலகல்..!!