For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Solar Subsidy | பிரதம‌ மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம்..!! இனி தபால்காரர் மூலமும் விண்ணப்பிக்கலாம்..!! எப்படி தெரியுமா..?

04:35 PM Mar 02, 2024 IST | 1newsnationuser6
solar subsidy   பிரதம‌ மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம்     இனி தபால்காரர் மூலமும் விண்ணப்பிக்கலாம்     எப்படி தெரியுமா
Advertisement

மத்திய அரசின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின் கீழ், சூரிய மின்தகடு அமைக்க, அந்தந்த பகுதிகளில் உள்ள தபால்காரர் மூலமும் விண்ணப்பிக்கலாம் என்று அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

Advertisement

வரும் காலத்தில் மின்சாரம் தான் இந்தியாவில் மிக முக்கியமான ஒன்றாக மாறப்போகிறது. அதிலும், சூரிய ஒளி மின்சாரம் தான் கணிசமான இடத்தை பிடிக்க போகிறது. ஏனென்றால், மத்திய அரசு சூரிய ஒளி மின்சாரத்தை ஊக்குவிக்க நேரடியாக களம் இறங்கி உள்ளது. வீடுகளில் சூரிய மின்சக்தியை ஊக்குவிக்கும் வகையில் 'பிரதமரின் சூரிய வீடு’ என்ற பெயரில் இலவச மின்சார திட்டத்தை ரூ.75,000 கோடி முதலீட்டில் தொடங்கப்போவதாக பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்தார். இந்த திட்டத்தின்படி, வீட்டின் கூரையில் சோலார் பேனல்களை பொருத்திக் கொள்ளும் வீடுகளுக்கு, மாதம் 300 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

தற்போது வீடுகளின் மேற்கூரையில் சோலார் பேனல்கள் பொருத்துவதற்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. அரசு மானியம் தருவதால், பல வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இப்போது மேற்கூரையில் சோலார் பேனல்களை பொருத்தி வருகின்றன. இந்த திட்டத்தின்படி, ஒரு கிலோவாட்டுக்கு 30 ஆயிரம் ரூபாயும், 2 கிலோவாட்டுக்கு 60 ஆயிரம் ரூபாயும், அதற்கு மேல் 78 ஆயிரம் ரூபாயும் மானியமாக வழங்கப்படுகிறது. பணி முடிந்த 7 முதல் 30 நாட்களுக்குள் வங்கிக் கணக்கில் மானியம் வரவு வைக்கப்படும். ஒரு கிலோவாட் சூரிய தகடு, ஒரு நாளில், 4 முதல் 5 யூனிட் மின்சாரம் வரை உற்பத்தி செய்யும் என்பதால் குறுகிய காலத்தில் முதலீட்டை திரும்ப பெற முடியும்.

இத்திட்டத்தில் சேர வீட்டு உரிமையாளர்கள் https://pmsuryaghar.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர் ஆதாருடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண், மின்சார ரசீது உள்ளிட்ட முழு விவரங்களுடன் அந்த பகுதிகளில் உள்ள தபால்காரரையோ அல்லது அஞ்சல் அலுவலகத்தையோ மார்ச் 8ஆம் தேதிக்குள் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ஒரு தொகுதி மட்டும் தான்..!! சம்மதம் என்றால் பேச்சுவார்த்தைக்கு வாங்க..!! கமலிடம் கெடுபிடி காட்டும் DMK..!!

Advertisement