For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பூமியை தாக்கும் சூரிய புயல்..!! இந்தியாவை பாதிக்குமா..? நாசா பகிரங்க எச்சரிக்கை..!!

A solar storm is a sudden explosion on the Sun. This is called solar storm in English.
03:38 PM Oct 06, 2024 IST | Chella
பூமியை தாக்கும் சூரிய புயல்     இந்தியாவை பாதிக்குமா    நாசா பகிரங்க எச்சரிக்கை
Advertisement

சூரியனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சூரிய புயல் ஏற்பட்டது. இது, பூமியை நோக்கி வரும் நிலையில், இது நமது கிரகத்தைத் தாக்கினால் பல வகையான பாதிப்புகள் ஏற்படும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக, இந்தியாவில் சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. நாம் வாழும் இந்த பால்வெளி மண்டலத்தில் பல மாற்றங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதில் சூரியக் குடும்பத்தில் நடக்கும் மாற்றங்கள் நேரடியாக நமது பூமியைப் பாதிக்கும்.

Advertisement

அந்த வகையில், தற்போது ஆய்வாளர்கள் சூரிய புயல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். சூரியனில் இருந்து கிளம்பியுள்ள இந்த சூரிய புயல் விரைவில் இந்தியாவைத் தாக்கலாம் என்று அமெரிக்காவின் நாசா ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனால் மின் சப்ளை தொடங்கிப் பல எலக்டிரானிங் சாதனங்கள் பாதிக்கப்படும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

சூரிய புயல் என்பது சூரியனில் ஏற்படும் திடீர் வெடிப்பு ஆகும். இதை ஆங்கிலத்தில் solar storm என்று கூறுகிறார்கள். இந்த சூரிய புயலின் போது அதிலிருந்து துகள்கள், ஆற்றல், காந்தப்புலங்கள் ஆகியவை மிகப் பெரியளவில் வெளியேறும். இது புயல் போல உருவாகி பூமியைத் தாக்கும். அப்படித் தாக்கும் போது இது தொலைத்தொடர்பு பாதிக்கப்படும். சாட்டிலைட்கள் மொத்தமாக முடங்கும் அபாயம் உள்ளது.

இப்போது ஏற்படும் சூரிய புயல் பூமியை சில நாட்களில் தாக்கும் என்பதால், இதை இந்திய ஆய்வாளர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்த சோலார் புயல் சாட்டிலைட்களை பாதிக்கும் என்பதால், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு இஸ்ரோ எச்சரித்துள்ளது. சூரிய புயல் நம்மை நெருங்குவதால் அடுத்த சில நாட்கள் மிக முக்கியமானதாக இருக்கும். வல்லுநர்கள் இது தொடர்பாக மேலும் கூறுகையில், "சில நாட்களுக்கு முன்பு இந்த சூரிய புயல் ஏற்பட்டது.

இருப்பினும், இது பூமியைத் தாக்க சில நாட்கள் வரை ஆகும் என்பதால் நாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இது பூமியில் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது நாளை தெரிந்துவிடும். இதனால் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதேநேரம் உறுதியாக இது பாதிப்பை ஏற்படுத்தும் எனச் சொல்ல முடியாது" என்றார்.

Read More : பாலியல் வழக்கில் சிக்கிய நடன இயக்குனர் ஜானி..!! அறிவிக்கப்பட்ட தேசிய விருதை ரத்து செய்வதாக அறிவிப்பு..!!

Tags :
Advertisement