For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சூரிய கிரகணம்..!! அமெரிக்காவை அதிரவைத்த பெண்..!! மூட நம்பிக்கையால் நடந்த கொடூர சம்பவம்..!!

02:30 PM Apr 11, 2024 IST | Chella
சூரிய கிரகணம்     அமெரிக்காவை அதிரவைத்த பெண்     மூட நம்பிக்கையால் நடந்த கொடூர சம்பவம்
Advertisement

சூரிய கிரகணத்தின்போது, அமெரிக்காவில் நடந்த இந்த சம்பவம் ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Advertisement

காலம் காலமாகவே மூடநம்பிக்கைகள் அட்டகாசங்கள் அதிகரித்து வருகின்றன. உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் கூட மருத்துவர்களிடம் நோயாளிகளை அழைத்துச் செல்லாமல் மாந்திரீகம், குறி கேட்பது போன்ற விபரீத விஷயங்களில் சிலர் இறங்கி விடுகின்றனர். குறுக்கு வழியில் பணக்காரர் ஆக வேண்டும் என்ற பேராசையால், அப்பாவி உயிர்களையும் சிலர் காவு வாங்கி விடுகின்றனர்.

இந்தியா மட்டுமல்லாமல் மாந்திரீக மூடநம்பிக்கை சார்ந்த விஷயங்கள் உலகம் முழுவதுமே பரவி கிடக்கின்றன. விஞ்ஞானம், தொழில்நுட்பம், கல்வி போன்றவைகள் ஒருபக்கம் வளர்ந்து வந்தாலும், இப்படியெல்லாம் கூட நடக்குமா? என்று மறுபக்கம் கலக்கம் தரும் மூடநம்பிக்கை சம்பவங்களும் நிகழத்தான் செய்கின்றன. இதற்கு வல்லரசு நாடு என்று சொல்லிக்கொள்ளும் அமெரிக்காவும் விதிவிலக்கல்ல.

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல் நகரை சேர்ந்த பெண் டேனியல் ஜான்சன் (34). இவர், அப்பார்ட்மென்ட் ஒன்றில், கணவருடன் வசித்து வந்தார். 9 வயது மற்றும் 8 மாதங்களில் இவருக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்த பெண் பிரபல ஜோதிடர். "அயோகா" என்ற பெயரில் வெப்சைட்களில் ஜோதிடம் எழுதி வந்தார். இவருக்கு ஏராளமான வாசகர்கள் உண்டு. தற்போது நடந்து முடிந்த முழு சூரிய கிரகணம் பற்றியும் இவர் எழுதியிருந்தார். "ஆன்மிகப்போரின் சுருக்கம்"தான் இந்த சூரிய கிரகணம் என்று குறிப்பிட்டிருந்தார்.

அதுமட்டுமல்ல, "உங்களை பாதுகாத்துக் கொள்ளவும், உங்கள் மனதை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும், தேவையான நடவடிக்கைகளை இந்த முழு சூரிய கிரகணத்தில் உடனே எடுங்கள். உலகம் இப்போது தெளிவாக மாறிக் கொண்டிருக்கிறது. நீங்கள் எந்த பாதையை தேர்ந்தெடுப்பது என்று முடிவு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று பதிவிட்டிருந்தார்.

எனவே, சூரிய கிரகணம் குறித்து மிக மோசமான பயத்தையும், கவலையையும் கொண்டிருந்தார் டேனியல் ஜான்சன். இதை பற்றியே எந்நேரமும் யோசித்து கொண்டே இருந்தார். கடந்த திங்கட்கிழமையன்று, வீட்டிலிருந்த தன் கணவனை, திடீரென்று கத்தியால் சரமாரி குத்தி கொலை செய்துவிட்டார். பிறகு, தன்னுடைய 2 குழந்தைகளையும் தரதரவென இழுத்து வந்து காரில் ஏற்றிக் கொண்டு கிளம்பினார். மணிக்கு 160 கி.மீ வேகத்தில் காரை ஓட்டிச் சென்று அதே வேகத்திலேயே தன்னுடைய 2 குழந்தைகளையும் காரில் இருந்து தூக்கி வீசி கொன்றுவிட்டார்.

அப்போதும் காரை நிறுத்தவில்லை. அதே வேகத்துடன் காரை ஓட்டிச்சென்று ஒரு பெரிய மரத்தில் மோதி, தற்கொலையும் செய்து கொண்டார். கொஞ்ச நேரத்தில் 4 உயிர்களும் அநியாயமாக பிரிந்துவிட்டன. 4 பேரின் சடலத்தையும் போலீசார் கைப்பற்றி போஸ்ட்மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்து விசாரணையும் நடத்தி வருகிறார்கள். இந்த பெண்ணின் கணவர், அமெரிக்காவில் விமானப்படையில் வேலை பார்க்கிறாராம். இருவருமே நிறைய படித்திருக்கிறார்கள். அளவுக்கு அதிகமாக ஜோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்டவர் இந்த பெண். எதற்கெடுத்தாலும் ஜோசியம் பார்த்து கொண்டேயிருப்பாராம். அந்த வகையில், சூரியகிரகணத்தால் பீதியடைந்து, கணவரையும், 2 குழந்தைகளையும் கொன்று, இந்த பெண் தற்கொலை செய்துகொண்டது மிகப்பெரிய அதிர்ச்சியை அமெரிக்காவில் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.

Read More : நீங்களும் பணக்காரர்களாக சூப்பர் வாய்ப்பு..!! இந்த பழைய ரூபாய் நோட்டு உங்கக்கிட்ட இருக்கா..?

Advertisement