For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

SOLAR ECLIPSE: அமெரிக்காவில் 4 நிமிடங்கள் மறையும் சூரியன்.!! நாளை நடைபெற இருக்கும் வானியல் அதிசயம்.!!

09:32 PM Apr 07, 2024 IST | Mohisha
solar eclipse  அமெரிக்காவில் 4 நிமிடங்கள் மறையும் சூரியன்    நாளை நடைபெற இருக்கும் வானியல் அதிசயம்
Advertisement

பூமி இயங்குவதற்கு அடிப்படையாக விளங்குவது சூரியன் ஆகும். சூரிய சக்தியால்தான் பூமியில் செடி கொடிகள் முளைப்பதிலிருந்து அவற்றின் உணவு சுழற்சி முறை வரை அனைத்தும் தங்கு தடையின்றி நடைபெறுகிறது. இத்தகைய சூரியன் திடீரென காணாமல் போனால் உலகம் முழுவதுமே இருண்டு விடும் . பூமியில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு நிகழ்வு அதே நாளில் தற்போது மீண்டும் நடைபெற இருக்கிறது.

Advertisement

மத்திய கிழக்கு நாடான சிரியாவில் 3000 ஆண்டுகளுக்கு முன்பு சூரியன் பகல் பொழுதில் திடீரென மறைந்திருக்கிறது. மின்சாரம் மற்றும் விளக்குகள் கண்டுபிடிக்கப்படாத அந்த காலத்தில் மக்கள் இதனைக் கண்டு மிகவும் அஞ்சி உள்ளனர். மேலும் இது கெட்ட சகுடமாகவும் கருதி இருக்கின்றனர். சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு சிரியாவில் நடந்தத சூரிய கிரகணம் பற்றிய குறிப்புகள் 1948 ஆம் வருடம் சிரியாவில் கண்டெடுக்கப்பட்ட ktu என்ற தகடின் மூலம் வெளியுலகிற்கு தெரிய வந்திருக்கிறது.

மேலும் பண்டைய மக்கள் சூரிய கிரகணத்தை கண்டு எவ்வாறு அஞ்சி இருக்கின்றனர் என்பதும் இந்த தகட்டில் உள்ள குறிப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது. பண்டைய மக்கள் சூரியகிரகணம் ஏற்பட்டால் ஆட்சி மாற்றம் நடக்கும் எனவும் அஞ்சு இருப்பதாக அந்த தகட்டில் இருக்கும் குறிப்புகள் தெரிவிக்கின்றன. எகிப்தியர்கள் மெசபடோமியர்கள் மற்றும் மாயனர்கள் என உலகின் பல்வேறு கலாச்சாரம் மற்றும் நாகரீகத்தை சேர்ந்த மக்களும் சூரிய கிரகணத்தை கெட்ட சகுனமாக கருதினர் என்பது அவர்களது குறிப்புகளில் இருந்து அறிய முடிகிறது.

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் நாளை சூரிய கிரகணம் ஏற்படும் இன்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். இந்த சூரிய கிரகணம் ஏற்படும் நேரத்தில் சூரியன் முற்றிலுமாக அஸ்தமிக்காது. நிலவு சூரியனை மறைத்துக் கொள்வதால் அந்தப் பகுதிகள் முழுவதும் இருண்டு விடும். வட அமெரிக்க கண்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் தென்படும் இந்த சூரிய கிரகணம் 4 நிமிடங்கள் மற்றும் 28 நொடிகளுக்கு நீடிக்கும் என வானியல் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

உலகின் ஒவ்வொரு மூலையிலும் 18 மாதங்களுக்கு ஒரு முறை சூரிய கிரகணம் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. இது தொடர்ச்சியாக ஒரே பகுதியில் நிகழவில்லை என்றாலும் வெவ்வேறு பகுதிகளில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. தற்போது அமெரிக்காவில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இந்தியாவில் சூரிய கிரகணம் 2031 ஆம் ஆண்டு நிகழும் என வானியல் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

Read More: IPL 2024: சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சி.!! அணியில் இருந்து திடீரென விலகிய முக்கிய வீரர்.!!

Tags :
Advertisement