முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஆஸ்திரேலியாவில் சமூக வலைதளங்களுக்கு தடை!. புதிய சட்டம் அமல்!. பிரதமர் அதிரடி!

Australia proposes ban on social media for those under 16
09:08 AM Nov 07, 2024 IST | Kokila
Advertisement

Australia: உலகின் முதல் நடவடிக்கையாக ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்டோருக்கான சமூக ஊடக பயன்பாட்டை தடை செய்ய அரசாங்கம் சட்டம் இயற்றும் என பிரதமர் ஆன்றணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement

சமூக ஊடகங்கள் நமது பிள்ளைகளுக்கு தீங்கு விளைவிக்கின்றன, தடை செய்ய உரிய நேரம் இதுவென பிரதமர் ஆன்றணி அல்பானீஸ் குறிப்பிட்டுள்ளார். அவை உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்ட 12 மாதங்களுக்குப் பிறகு சட்டம் நடைமுறைக்கு வரும், இந்த ஆண்டு அதாவது, அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், பெற்றோரின் ஒப்புதலைப் பெற்ற பயனர்களுக்கும் இதில் விதிவிலக்குகள் இருக்காது என அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

இந்த சட்டம், இளைஞர்களின் மனநலம் மற்றும் பாதுகாப்பில் சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்து அதிகரித்து வரும் கவலைகளை நிர்வத்தி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளதாக அல்பானீஸ் தெரிவித்தார். பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், டிக்டோக், கூகிள், யூடியூப் உள்ளிட்ட தளங்கள் சட்டவரம்புக்குள் கொண்டுவரப்படும்.

ஆஸ்திரேலியாவின் கொள்கை மிகவும் கடுமையான ஒன்றாக இருந்தாலும், பல நாடுகள் ஏற்கனவே சட்டத்தின் மூலம் குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதாக உறுதியளித்துள்ளன. கடந்த ஆண்டு பிரான்ஸ் 15 வயதிற்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்க பயன்பாட்டிற்கு தடை விதிக்க முன்மொழிந்தது, இருப்பினும் பயனர்கள் பெற்றோரின் ஒப்புதலுடன் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: “விஜய் அரசியலுக்கு வந்து எந்தப் பிரயோஜனமும் இல்லை”..!! தமிழ்நாட்டில் ஜெயிக்க முடியாது..!! ரஜினியின் சகோதரர் பரபரப்பு பேட்டி..!!

Tags :
australiabanned.children under 16Social networking
Advertisement
Next Article