முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’சொன்னா எங்க கேக்குறாங்க’..? பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த பள்ளி மாணவனின் 2 கால்களும் அகற்றம்..!!

11:05 AM Nov 18, 2023 IST | 1newsnationuser6
Advertisement

தமிழ்நாடு முழுவதும் பள்ளி கல்லூரி மாணவர்கள் அரசுப் பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்ளலாம். ஆனால், பள்ளி-கல்லூரி செல்லும் நேரங்களில் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாகவே இயக்கப்பட்டு வருவதாக மாணவர்களிடையே பொதுவான குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதனால் கிடைக்கும் பேருந்தில் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு செல்வதை காணலாம். ஓட்டுனரும், நடத்துனரும் மேலே ஏறி வாங்க என எத்தனை முறை சொன்னாலும், சிலர் அலட்சியமாக படியில் பயணம் செய்து வருவார்கள்.

Advertisement

குறிப்பாக சென்னையில் படிக்கட்டில் தொங்கிய படி செல்வதையே வாடிக்கையாக கொண்ட மாணவர்கள் பலர், இந்த மாதிரி பயணங்களில் ஆபத்தும் நிறைந்துள்ளன என்பதை இளைய சமுதாயம் புரிந்து கொள்வதே இல்லை. இந்நிலையில், சென்னை குன்றத்தூரில் படிக்கட்டில் பயணம் செய்த போது விபத்தில் சிக்கிய பள்ளி மாணவனின் இரண்டு கால்கள் துண்டாகியுள்ளது. இச்சம்பவத்தால் சக மாணவர்கள் மிரண்டு போயுள்ளனர்.

சென்னை குன்றத்தூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் சந்தோஷ். இவர் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் சக மாணவர்களுடன் அரசுப் பேருந்தில் முன்பக்க படிக்கட்டில் தொங்கியபடி பயணித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தவறி கீழே விழுந்துவிட்டார். அப்போது பேருந்தில் பின்பக்க சக்கரம் சந்தோஷின் இருகால்கள் மீது ஏறி இறங்கியதில் கால்கள் நசுங்கின.

இதனால் பள்ளி மாணவன் வலி தாங்க முடியாமல் கதறி துடித்தார். உடனடியாக மருத்துவமனை கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், மாணவனை ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மாணவனுக்கு நேற்று இரவு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 2 கால்களும் அகற்றப்பட்டுள்ளது. அத்துடன் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
சென்னைதமிழ்நாடுபள்ளி மாணவன்
Advertisement
Next Article