முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

50 வயது தந்தையை திருமணம் செய்த மகள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! - வச்சு செய்யும் நெட்டிசன்கள்

'So What?': 24-Year-Old Girl 'Marries' Her 50-Year-Old Father, Viral Video Shocks Netizens
02:17 PM Dec 02, 2024 IST | Mari Thangam
Advertisement

எல்லா உறவுகளிலும் ரத்த உறவுகளே சிறந்தது என்று கூறப்படுகிறது. சில உறவுகள் கடவுளுக்கு இணையாக பார்க்கப்படுகிறது. கஷ்டம் மற்றும் மகிழ்ச்சியின் போது ஒருவருக்கொருவர் துணை நிற்கிறார்கள். ஆனால் சமீபகாலமாக சமூகத்தில் நடக்கும் சம்பவங்களை பார்த்தால் கவலை தருவதாகவே உள்ளது என்றே சொல்லலாம்.

Advertisement

சொத்துக்காக அட்டூழியங்களில் ஈடுபடுபவர்கள் சிலர், பாலியல் ஆசைக்காக சொந்த மகள்களைக் கொன்று குவிப்பவர்கள் சிலர். சமீபகாலமாக, தந்தைகள் தங்கள் மகள்களை வன்கொடுமை செய்தல், சகோதரர்கள் தங்களின் சகோதரிகளை வன்கொடுமை செய்யும் சம்பவங்கள் செய்திகளில் உள்ளன. அந்த வரிசையில், ஒரு மகள் தனது சொந்த தந்தையை திருமணம் செய்து கொண்ட வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. 

தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், 24 வயது இளம் பெண், திருமணம் முடிந்து இருப்பது போல், ஆரஞ்சு நிற சேலையை அணிந்துக்கொண்டு, தனது நெற்றியில் செந்தூரம் வைத்துக்கொண்டும் இருக்கிறார். அவருடன் 50 வயதான நபர் இருக்கிறார்.

இணையத்தில் வைரலான அந்த வீடியோவில், “இது உங்கள் மகளா” என அங்கிருப்பவர் கேள்வி எழுப்புகிறார். அதற்கு அவர்கள் இருவரும் இணைந்து ஆம் என்று பதில் அளிக்கிறார்கள். உன் தந்தையையே திருமணம் செய்துகொள்வதில் கொஞ்சம் கூட வெட்கப்படவில்லையா என்று ஒரு பெண் கேள்வி கேட்கிறார். நீங்கள் எந்த காலத்தில் வாழ்கிறீர்கள்? ஏன் அவமானமடைய வேண்டும்? என இருவரும் பதில் அளிக்கின்றனர். 

மேலும், அந்த வீடியோவில் சிலர் “நீங்கள் இருவரும் யார்?” என்று கேட்கப்படுகிறது. அதற்கு அந்த இளம் பெண், “அவர் என் தந்தை. நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக இருப்பதை இந்த உலகிற்கு காட்டியுள்ளோம். எங்கள் உறவுக்கு யாரும் ஆதரவு தரவில்லை. ஆனால், நாங்கள் திருமணம் செய்துக்கொண்டோம். யாரும் ஆதரிக்கவில்லை என்றாலும், நாங்கள் அதனை பொருட்படத்தபோவதில்லை” என்று தெரிவிக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

Read more ; உலகிலேயே முதல் முறையாக.. பாலியல் தொழிலாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு..!! – புதிய வரலாறு படைத்தது பெல்ஜியம்

Tags :
father daughter marriageviral vedio
Advertisement
Next Article