கிணறுகளில் இவ்வளவு அதிசயங்களா?… திகைக்க வைக்கும் இந்தியாவின் கட்டிடக்கலை சுவாரஸ்யம்!
இந்திய கட்டிடக்கலையை பொறுத்தவரை மாளிகை, கோட்டைகள், கோவில்கள் மட்டுமல்ல தண்ணீர் தேக்கிவைக்கும் கிணறுகளை கூட ரசனைகளோடு காட்டியுள்ளனர்.அப்படி இந்தியாவில் பல அழகான படிக்கட்டு கிணறுகள் உள்ளன. குஜராத்தின் படானில் உள்ள ராணி கி வாவ், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகும். இந்த 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த படிக்கட்டுக் கிணறு, ராணி உதயமதியால் அவரது கணவர் முதலாம் பீம்தேவ் நினைவாக கட்டப்பட்டது. படிக் கிணற்றில் தெய்வங்களின் சிற்பங்கள், தேவர்கணங்களின் சிற்பங்கள், அழகிய வடிவமைப்புகள் உள்ளன.
ஜெய்ப்பூரில் இருந்து சுமார் 2 மணிநேர பயணத்தில் அபனேரியில் சந்த் பௌரி அமைந்துள்ளது. இது 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் அழகான படிக்கட்டுக் கிணறுகளில் ஒன்றாகும். இது 3500 குறுகிய படிகளை சரியான சமச்சீர் நிலையில் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது, குஜராத்தில் அகமதாபாத்திற்கு சற்று வெளியே அமைந்துள்ள அடலாஜ் ஸ்டெப்வெல் மத மற்றும் புராண சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய அழகான அமைப்பாகும். இது 1499 இல் ராணி ருதாபாய் என்பவரால் கட்டப்பட்டது. இது எண்கோண கிணறு மற்றும் அழகாக செதுக்கப்பட்ட காட்சியகங்களுக்கு பெயர் பெற்றது.
ராணி பத்மினியின் படித்துறை, ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் நகரில் அமைந்துள்ளது. இந்த படிகிணறு மேவார் ராணி பத்மினியுடன் தொடர்புடையது. இது மற்றவை போல பிரமாண்டமாக இல்லாவிட்டாலும், இது ஒரு தனித்துவமான அழகைக் கொண்டுள்ளது. தூர்ஜி கா ஜால்ரா என்பது ஜோத்பூரின் மையப்பகுதியில் உள்ள மீட்டெடுக்கப்பட்ட படிக்கட்டுக் கிணறு. அதன் பழைய புகழை மீண்டும் கொண்டு வர விரிவான புனரமைப்புக்கு உட்பட்டது.
நீம்ரானா பாவோலி என்பது ராஜஸ்தானில் உள்ள நீம்ரானா கோட்டைக்கு அருகில் உள்ள மற்றொரு பழமையான படிக்கிணறு ஆகும். இந்த படிக்கட்டுக் கிணறு அதன் தனித்துவமான கட்டுமானத்திற்காக அறியப்படுகிறது, இரண்டு செட் படிக்கட்டுகள் குறுக்குவெட்டு வாக்கில் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் படிகள் சந்திப்பதில்லை. அக்ரசென் கி பாவோலி, புது தில்லியின் மையப் பகுதியில் அமைந்திருந்தாலும், தில்லியில் அதிகம் கவனிக்கப்படாத இடமாகும். இது மகாபாரத காலத்தில் புகழ்பெற்ற மன்னர் அக்ரசேனனால் கட்டப்பட்டதாக நம்பப்படும் படிக்கட்டுக் கிணறு.