For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கழுதை பாலில் இவ்வளவு நன்மைகளா? குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?

06:20 AM May 17, 2024 IST | Baskar
கழுதை பாலில் இவ்வளவு நன்மைகளா  குழந்தைகளுக்கு கொடுக்கலாமா
Advertisement

பசு, எருமை, மாடு, ஆடு பால்கள் போன்றே கழுதை பாலும் பிரபலம். ஆனால் உண்மையில் இந்த கழுதை பாலின் நன்மைகள் குறித்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே விவாதிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

இத்தாலி, கிரீஸ், பெல்ஜியம், ஜெர்மனி போன்ற நாடுகளில் கழுதைகள் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன. கழுதை பாலை குறித்து தேசிய ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில், இந்தப் பாலில் உடல் பருமன். புற்றுநோய் மற்றும் ஒவ்வாமை தொடர்பான பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய நன்மைகள் உள்ளன என்பது தெரியவந்துள்ளது. மேலும் கழுதை பாலில் உள்ள கேசின் மற்றும் பாலாடையில் உள்ள புரதச் சத்துக்கள் கட்டிகளை உருவாக்கக் கூடிய உயிரணுக்களுக்கு எதிரான செயல்பாட்டைக் கொண்டுள்ளது. மேலும் இந்த பால் மார்பக புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்களுக்கு எதிரான ஒரு சிறந்த பால் என்று கூறப்படுகிறது.

கீல் வாதத்திற்கு சிகிச்சை அளிக்க இந்த கழுதை பால் பயன்படுகிறது. இந்த கழுதை பாலில் உள்ள நன்மைகள் தாய்ப்பாலுக்கு ஒத்த நன்மைகளை கொண்டிருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இந்த பாலில் குறைந்த கலோரிகள் மற்றும் குறைந்த கொழுப்பு உள்ளது. ஒரு லிட்டர் கழுதை பாலில் 16 மில்லி கிராம் எண்ணெய் சேர்ப்பது அந்த பாலை பசுவின் பாலை விட சிறந்த பாலாக மாற்றுகிறது. இந்த கழுதைப்பால் எலும்புகளை வலிமையாக்கவும், கீல்வாதம் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. மேலும்
கழுதை பால் குறைந்த கொழுப்பை கொண்டதாகும். 100 கிராம் கழுதை பாலில் வெறும் 8.6 மில்லிகிராம் கொழுப்பு உள்ளது. பசுவின் பாலை ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு. எனவே உடல் பருமன் உள்ளவர்களுக்கு இது ஒரு சரியான பானமாக உள்ளது. மேலும் இதில் உள்ள லினோலிக் அமிலத்தின் பங்கு எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது.

மாட்டு பாலில் உள்ள அதிக கேசின் மற்றும் புரதம் காரணமாக குழந்தைகளுக்கு சில சமயங்களில் ஒவ்வாமை ஏற்படும். இது குழந்தைகளில் பொதுவாக ஏற்படும் ஒரு பிரச்னையாகும். இதனால் கால்சியம் போன்ற சத்துக்கள் குழந்தைகளுக்குக் கிடைக்காமல் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இந்தக் கழுதை பால் பசு மற்றும் மாட்டு பாலுக்கு சரியான ஒரு மாற்று பாலாக உள்ளது. இந்தக் கழுதை பாலில் கேசின் மற்றும் பாலாடையில் உள்ள அதிக புரதம் ஒவ்வாமையின் விளைவுகளுக்கு காரணமாக உள்ளது. பெர்டுசிஸ் அல்லது ஹூப்பிங் இருமல் என்பது போர்ட்டெல்லா பெர்டுசிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படும் சுவாசக்குழாய் தொற்று நோய் ஆகும். சூடான் நாட்டில் இந்த கழுதைப் பாலை அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காரணமாக, வூப்பிங் இருமல் சிகிச்சையில் அடிக்கடி பயன்படுத்துகிறது. மேலும் இந்த பாலில் நோய் எதிர்ப்பு பண்புகள், நமது உடலில் பாக்டீரியா காரணமாக ஏற்படும் நுரையீரல் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

கழுதைப் பாலில் உள்ள புரதங்கள், பெப்டைடுகள், என்சைம்கள், வளர்ச்சி காரணிகள், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், தாதுக்கள் மற்றும் நோயெதிர்ப்பு காரணிகள், அதிக ஊட்டச்சத்து மற்றும் உயிரியல் ஆற்றலைக் கொண்டுள்ளது. இந்த பண்புகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த நமக்கு உதவுகிறது. மேலும் உணவுகளினால் ஏற்படும் ஓவ்வாமை பிரச்சனைகளையும் தடுக்க உதவுகிறது. புதிய கழுதைப் பாலில் ஆன்டிபாடி-சுரக்கும் உயிரணுக்களின் திறன் மேம்படுவதாக கூறப்படுகிறது. இது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படுகிறது.கழுதைப் பாலில் ஆக்ஸிஜனேற்ற செயல்திறன் உள்ளது. மாட்டுப் பாலுடன் கழுதைப் பாலை ஒப்பிடும்போது, கழுதை பாலில் திறன் அதிகம் என்று ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது. கழுதை பாலை உணவில் சேர்த்துக்கொள்வது உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை ஆக்ஸிஜனேற்றுவதன் மூலமும், செல்கள் சேதமடைவதைத் தடுப்பதன் மூலமும் நமது வயதைக் குறைக்க உதவுகிறது.

கழுதைப் பாலில் உள்ள ஒப்பனை பயன்கள் காரணமாக பரோவா கிளியோபாட்ரா அவரது சருமத்தின் மென்மையை பராமரிக்க கழுதை பாலில் குளித்தார் என்று கூறப்படுகிறது. இத்தாலி பிரான்ஸ் போன்ற நாடுகளில் இந்த கழுதை பால் அதிகமாக அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. மாட்டுப் பாலை விட இதில் குறைந்த pH உள்ளடக்கம் உள்ளது. இது நமது சருமத்தைப் பராமரிக்க உதவுகிறது. கழுதைப் பாலில் உள்ள ஒப்பனை பயன்கள் காரணமாக பரோவா கிளியோபாட்ரா அவரது சருமத்தின் மென்மையை பராமரிக்க கழுதை பாலில் குளித்தார் என்று கூறப்படுகிறது. இத்தாலி பிரான்ஸ் போன்ற நாடுகளில் இந்த கழுதை பால் அதிகமாக அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. மாட்டுப் பாலை விட இதில் குறைந்த pH உள்ளடக்கம் உள்ளது. இது நமது சருமத்தைப் பராமரிக்க உதவுகிறது. அதேபோல்,கழுதைப் பாலில் சிறிதளவு சூரியகாந்தி எண்ணெய் சேர்ப்பது, தாய்பாலுக்கு ஒத்த நன்மைகளை கொண்டு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தாய்ப்பாலுடன் ஒப்பிடும்போது இந்த கழுதைப் பாலில் குறைந்த கொழுப்பு மற்றும் கலோரிகள் உள்ளன. மேலும் இதில் தாய்ப்பாலை விட அதிகப் கலோரிகள் மற்றும் தாதுக்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. சிறு வயதிலேயே சில குழந்தைகளுக்கு பால் ஒவ்வாமை ஏற்படுவது சகஜம். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக இந்த கழுதைப்பால் இருக்கும் என்று கூறப்படுகிறது

பலவீனம் குறைந்த ரத்த அணுக்கள், அதிக காய்ச்சல் போன்றவை சிக்கன்குனியாவின் அறிகுறிகளாகும். கழுதைப் பாலில் உள்ள இம்யூனோகுளோபுலின் உள்ளடக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து சிக்கன்குனியா போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது. கழுதை பாலில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரசின் சரியான விகிதம் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. அதிக அளவில் கால்சியம் இருந்தால் அது மலச்சிக்கல் மற்றும் பசியின்மையை ஏற்படுத்துகிறது. இந்த கழுதைப் பாலில் 100 கிராமுக்கு 68.9 மில்லி கிராம் கால்சியமும், 41 மில்லிகிராம் பாஸ்பரசும் உள்ளது. இது மாட்டுப் பாலை விட குறைவானது ஆகும்.

Read More: “இந்தியா நிலவில் கால் பதிக்கிறது.. நம் குழந்தைகள் சாக்கடையில் விழுகுது!” – பாகிஸ்தான் எம்.பி ஆதங்கம்

Advertisement