For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Affidavit: 39 மக்களவை தொகுதிகளிலும் இது வரை 737 பேர் வேட்புமனு தாக்கல்...!

05:30 AM Mar 27, 2024 IST | Vignesh
affidavit  39 மக்களவை தொகுதிகளிலும் இது வரை 737 பேர் வேட்புமனு தாக்கல்
Advertisement

39 மக்களவை தொகுதிகளிலும் நேற்று வரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

17-வது மக்களவையின் பதவிக்காலம் 2024-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய மக்களவையை அமைப்பதற்கு தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. அரசியலமைப்பு சட்ட விதிகளைக் கருத்தில் கொண்டு, 18-வது மக்களவைக்கான தேர்தல்களை சுதந்திரமான முறையில் நடத்த விரிவான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

Advertisement

தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது . தமிழ்நாட்டில் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேர்தல் வேட்புமனு தாக்கல் 25-ம் தேதி தொடங்கியது. இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைய உள்ளது. புதுச்சேரி தவிர்த்து 39 மக்களவை தொகுதிகளிலும் நேற்று வரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

அதே போல மார்ச் 28-ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற உள்ளது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 30 ஆகும். வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறும்.

Advertisement