For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Snoring: தூங்கும் போது குறட்டை விடும் நபரா நீங்கள்.! உங்களுக்கு தான் இந்த செய்தி.!?

08:30 AM Feb 16, 2024 IST | 1newsnationuser5
snoring  தூங்கும் போது குறட்டை விடும் நபரா நீங்கள்   உங்களுக்கு தான் இந்த செய்தி
Advertisement

Snoring: பொதுவாக தற்போது உள்ள காலகட்டத்தில் பலரும் தூக்கத்தில் குறட்டை விடும் பழக்கம் உடையவர்களாக இருந்து வருகின்றனர். குறட்டை விடும் நபருக்கு அந்த சத்தம் கேட்க விட்டாலும் அருகில் படுத்து உறங்கும் நபருக்கு மிகப்பெரும் தொல்லையாகவே இருந்து வருகிறது. மூக்கு மற்றும் தொண்டை பகுதியில் ஏற்படும் பாதிப்பினாலேயே குறட்டை சத்தம் உருவாகிறது. இதனை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்?

Advertisement

சமீபத்திய ஆய்வு ஒன்றில் ஆண்கள் மற்றும் பெண்கள் பலரை வைத்து யாருக்கு அதிகம் குறட்டை சத்தம் வருகின்றது என்பதையும், அதன் காரணங்களை கண்டுபிடித்தனர். அதாவது உடல் எடை அதிகமானவர்கள், புகை பிடிப்பவர்கள், தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், மூக்கு மற்றும் தொண்டை பகுதியில் பிரச்சனை இருப்பவர்கள் போன்றவர்கள் தூங்கும் போது குறட்டை விடுகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு குறட்டை விடும் நபர்களுக்கு அடிக்கடி மூச்சுதிணறல் ஏற்படும். மேலும் இரவு தூக்கம் தொலையும். இதனால் பகலிலும் சோர்வாகவே காணப்படுவார்கள். இதுவே காலப்போக்கில் தூக்கமின்மை பிரச்சனையை உருவாக்குகிறது. குறிப்பாக இவர்களுக்கு ஸ்லீப் அப்னியா சின்ரோம் என்ற பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பு வந்துவிட்டால் மூளை, இதயத்திற்கு செல்லும் ஆக்சிஜனின் அளவு குறைந்து கார்பன் டை ஆக்சைடை அதிகரிக்கும். இது உடல் உறுப்புகளுக்கு பல்வேறு வகையான கேடுகளை ஏற்படுத்துகிறது.

சாதாரண குறட்டை தானே என்று கண்டு கொள்ளாமல் விடுவது, காலப்போக்கில் மிகப்பெரும் அளவு உடல் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. எனவே குறட்டை பிரச்சனையை சரி செய்ய மருத்துவரை சந்தித்து நோய் பாதிப்பிற்கான காரணங்களை அறிந்து தீர்வு பெறுவது நல்லது. மேலும் தூங்குவதற்கு முன்பு வெதுவெதுப்பான நீரை குடிப்பது, மூச்சுப் பயிற்சி செய்வது, தலையணையை பயன்படுத்தாமல் தூங்குவது, ஒரு பக்கமாக சாய்ந்து படுத்துக் கொள்வது, புகை பிடிக்காமல் இருப்பது போன்ற செயல்முறைகளின் மூலம் குறட்டை விடும் பிரச்சனையை ஓரளவிற்கு கட்டுப்படுத்தலாம்.

English summary
Are you a person who snores while sleeping? Snoring occurs when air cannot flow freely through the airway as a person sleeps. When the airway is narrowed or partially blocked, breathing causes the tissues of the upper airway to vibrate, resulting in the sound heard when someone snores.

Read more: தினமும் 3 கப் டீ குடிப்பதனால் இவ்வளவு நன்மைகளா.! மருத்துவர்களின் அறிவுரை என்ன.!?

Tags :
Advertisement