Snake | உலகின் மிகப்பெரிய பாம்பு அமேசானில் கண்டுபிடிப்பு..!! 200 கிலோ எடை, 26 அடி உயரம்..!!
உலகின் மிகப்பெரிய பாம்பு அமேசான் மழைக்காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த பாம்பு 26 அடி உயரமும், 200 கிலோ எடையும் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். விஞ்ஞானி மற்றும் பேராசிரியர் ஃரீக் வோன்க் அமேசான் காட்டிற்குள் உலகின் மிகப்பெரிய பாம்பைக் கண்டறிந்துள்ளார்.
இதுகுறித்து சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்ட காணொளியில், அவர் தண்ணீருக்குள் நீந்தி, தண்ணீருக்குள்ளே இருக்கும் மிகப்பெரிய பாம்பின் அருகே செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்தக் காணொளியில் அவர், 'உலகின் மிகப்பெரிய பாம்பு இதுதான். கார் டயர் அளவுக்கு அகலமும், 200 கிலோ எடையும் கொண்டுள்ளது. அதன் தலை, என் தலை அளவுக்கு உள்ளது.' எனக் கூறியுள்ளார். மேலும், '7.5 மீட்டர் உயரமும், 500 கிலோ எடைகொண்ட பாம்புகள் கூட இங்கிருப்பதாக வௌராணி மக்கள் தெரிவிக்கின்றனர்' என மருத்துவர் பிரயன் கூறியுள்ளார்.
English Summary : World's largest snake discovered in the Amazon
Read More : Idli Dosa | சுற்றுச்சூழலுக்கு ஆபத்தாக மாறும் இட்லி, தோசை..!! விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்..!!