முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சாதனைகளை குவித்த ஸ்மிருதி மந்தனா!. 2024 ஆம் ஆண்டுக்கான ஐசிசி விருதுக்கு பரிந்துரை!.

Smriti Mandhana has accumulated achievements! Nominated for the ICC award for 2024!
07:24 AM Dec 30, 2024 IST | Kokila
Advertisement

Smriti Mandhana: நடப்பாண்டுக்கான ஐ.சி.சி., விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட வீரர், வீராங்கனைகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

இதன்படி, சிறந்த ஒருநாள் போட்டி வீராங்கனைக்கான விருதுக்கு இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா பரிந்துரைக்கப்பட்டுள்ளார். நடப்பு ஆண்டில் விளையாடிய 13 ஒருநாள் போட்டியில், 4 சதம், 3 அரைசதம் உட்பட 747 ரன் குவித்துள்ள மந்தனா, இந்த ஆண்டு அதிக ரன் எடுத்த வீராங்கனைகள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். இவரது சராசரி 57.46, 'ஸ்டிரைக் ரேட்' 95.15 ஆக உள்ளது.

இதேபோல், தென் ஆப்ரிக்காவின் லாரா வோல்வார்ட், இலங்கையின் சமாரி, ஆஸ்திரேலியாவின் அனாபெல் சுதர்லேண்ட் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். சிறந்த சர்வதேச 'டி-20' போட்டி வீரருக்கான விருதுக்கு இந்திய வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

நடப்பு ஆண்டில் விளையாடிய 18 போட்டியில், 36 விக்கெட் சாய்த்துள்ள அர்ஷ்தீப், அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலிடத்தை இலங்கையின் ஹசரங்காவுடன் பகிர்ந்து கொண்டார். 'டி-20' உலக கோப்பையில் 'வேகத்தில்' மிரட்டிய அர்ஷ்தீப், 17 விக்கெட் கைப்பற்றினார். அர்ஷ்தீப் சிங்குடன் பாகிஸ்தானின் பாபர் ஆசம், ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராஜாவும் இவ்விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.

Readmore: 110 ஆண்டுகள் வரலாறு!. டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய மைல்கல்!. பும்ரா அசத்தல்!

Tags :
accumulated achievementsICC awardNominatedSmriti Mandhana
Advertisement
Next Article