நோய் இல்லாமல் வாழ வேண்டுமா? அப்போ காலையில் இதை குடியுங்க.. டாக்டர் அட்வைஸ்..
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சத்தான உணவை, சரியான நேரத்தில், சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, நோய் இல்லாத வாழ்க்கைக்கு ஆரோக்கியமான காலை உணவு மிக முக்கியமான ஒன்று. நீங்கள் உங்கள் காலை உணவை அதிக கவனத்தோடு எடுத்துக்கொண்டாலே நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம். ஒரு சிறந்த தொடக்கமான காலை உணவில் அதிக அளவு எண்ணெய் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நாம் காலையில் சாப்பிடும் உணவில், நார்ச்சத்து, புரதங்கள், கொழுப்புகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இருக்க வேண்டும். வேண்டும் என்றால், நீங்கள் காலையில் ஒரு ஸ்மூத்தியை எடுத்துக் கொள்ளலாம். இதனால் உங்கள் வயிறு நிறைவது மட்டும் இல்லாமல், உங்களின் உடல் மிக ஆரோக்கியமாக இருக்கும்.
இந்த ஸ்மூத்தியை தயாரிக்க, மாதுளை, கனிந்த வாழைப்பழம், ஊறவைத்த பாதாம் மற்றும் காய்ந்த திராட்சையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்தால் போதும், சுவையான ஆரோக்கியமான ஸ்மூதி ரெடி.. உங்களுக்கு தேவைப்பட்டால் இதனுடன் பால், மற்றும் மற்ற நட்ஸ் வகைகளையும் சேர்த்து கொள்ளலாம். இனிப்பு சுவைக்கு சிறிது நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். இதனை பெரியவர்களுக்கு மட்டும் இல்லாமல், உங்கள் குழந்தைகளுக்கும் தாரளமாக கொடுக்கலாம். இதனால் அவர்களின் உடல் பலம் பெறும். நீங்கள் இதை தொடர்ந்து கொடுக்கவில்லை என்றாலும், வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு கொடுக்கலாம்.
Read more: பெண்களே எச்சரிக்கை!!! தாய்ப்பால் கொடுக்காத பெண்களை அதிகம் பாதிக்கும் மார்பக புற்றுநோய்…