கொஞ்சம் சிரிங்க பாஸ்!. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சிரிப்பது கட்டாயம்!. சிரிப்பு தினம் கடைபிடிக்க உத்தரவிட்ட நாடு!.
Smile: ஜப்பானின் யமகட்டா மாகாணத்தில் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சிரிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாதத்தின் 8வது நாளை சிரிப்பு தினமாக கடைபிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜப்பானின் யமகட்டா பல்கலையில் சிரிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் இதய நோய் அபாயத்தை குறைக்க சிரிப்பு உதவுவதுஉறுதியானது. இதையடுத்து யமகட்டா மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு நாளைக்கு ஒரு முறையாவது மக்கள் சிரிப்பதை கட்டாயமாக்கி சட்டம்இயற்றப்பட்டுள்ளது. மேலும் மாதத்தின் 8வது நாளை சிரிப்பு தினமாக கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், இந்த உத்தரவு தனி மனித சுதந்திரத்தை பாதிக்கும் என்றும், நோய் அல்லது வேறு காரணங்களால் சிரிக்க முடியாதவர்களின் உரிமைகளை இந்த உத்தரவு மீறுவதாகவும் அங்குள்ள சில அரசியல்வாதிகள் விமர்சித்துஉள்ளனர்.
Readmore: இவர அடிச்சுக்க ஆளே இல்ல!. எல்லா காலத்திலும் சிறந்த வீரர் தலதான்!. ரெய்னா நெகிழ்ச்சி!