மக்களே எச்சரிக்கை..! காய்கறிகள் விஷமாகும் அபாயம்!! கட்டாயம் படியுங்கள்..
காய்கறிகள் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் காய்கறி சாப்பிட்டதால் ஒரு சிறுமி இறந்துள்ளார் என்ற செய்தி கண்டிப்பாக நம்மை அதிர வைக்கும். சிறுமியின் இறப்புக்கு காரணம் என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
உணவு பொருட்களை விளைவிக்கும் போது அதனை பூச்சிகளிடம் இருந்து காக்க பூச்சிக்கொல்லி மருந்துகள் உபயோகிப்பது வழக்கம். அப்படி பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பூச்சிகளுக்கு மட்டும் இன்றி நம்முடைய உடலுக்கும் தீங்கு விளைவிக்கிறது. இது ஒரு சிறுமியின் மரணத்திற்கே காரணமாகியுள்ளது. 14 வயது சிறுமி தங்கள் வயலில் பயிரிடப்பட்ட முட்டைகோயை சாப்பிட்டுள்ளார். இதனால் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்த அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். சிறுமியின் மரணத்திற்கு பூச்சிமருத்து உபயோகிக்கப்பட்ட காயை சாப்பிட்டது தான் என மருத்துவ அறிக்கையில் தெரியவந்துள்ளது.
பூச்சிக்கொல்லி மருந்து அடிக்காத காய்கறிகள் அரிது. எனவே காய்கறிகளை பச்சையாக உண்பதை தவிர்க்க வேண்டும். சமைக்கும் முன்பு குறைந்தது இரண்டு முறையாவது காய்கறிகளை கழுவிவிட்டு பின்னர் உபயோகிக்க வேண்டும். பூச்சிக்கொல்லி மருந்துகளினால் குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, செரிமான பிரச்சனைகள் ஏற்படும். மேலும் பூச்சிக்கொல்லி மருந்துகள் இருக்கும் காய்கறிகளை சரியாக கழுவாமல் உண்பதால் தோல் பிரச்சனை, கண் எரிச்சல், ஒவ்வாமை, அரிப்பு,சொறி போன்றவை ஏற்படுகின்றன. தொடர்ந்து பல நாட்கள் இதனை உட்கொள்வதால் லுகேமியா மற்றும் லிப்போமா போன்ற புற்றுநோய் அபாயங்களும் ஏற்படுகிறது.