உஷார்..!! விஷமாகும் கூல்ட்ரிங்ஸ்.. யாரும் வாங்காதீங்க மக்களே..!! - வைரலாகும் மேக்கிங் வீடியோ
கோடைக் காலத்தில், குளிர்ச்சியைத் தேடி மக்கள் பேக் செய்யப்பட்ட பழச்சாறுகளை அதிக அளவில் வாங்குகின்றனர். அத்தகைய தயாரிப்புகளில் உண்மையில் பழங்கள் உள்ளதா இல்லையா என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? பேக் செய்யப்பட்ட கூல்ட்ரிங்ஸ் எப்படி தயாரிக்கப்படுகிறது என்ற வீடியோவை ஒரு டிஜிட்டல் கிரியேட்டர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிறது.
வீடியோவில், சிவப்பு மற்றும் ஆரஞ்சு வண்ணங்கள் ஒரு இயந்திரத்தில் போடப்பட்டுள்ளன. அதில் சர்க்கரை பாகு மற்றும் சில ரசாயனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சில மஞ்சள் நிற தயாரிப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இது வேகமாக கலக்கப்பட்டு பிளாஸ்டிக் பேப்பர் பாக்கெட் பாட்டில்களில் நிரப்பப்படுகிறது. பேக் செய்யப்பட்ட உணவு பதப்படுத்தப்பட்டு இந்த பெரிய காகித பெட்டிகளில் அடைக்கப்படுகிறது. இந்த வீடியோ வெளியானவுடன் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.
இந்த வீடியோவில் பேக் செய்யப்பட்ட உணவை உண்பவர்களை சமூக வலைதளவாசிகள் ட்ரோல் செய்து வருகின்றனர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு பயணர் கோரிக்கை வைத்துள்ளார். மற்றொரு பயனர் இதை ஏன் அரசாங்கம் தடுக்கவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு பயனர் எப்போதும் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டும் என்று எழுதினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Read more ; அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா நீங்கள்..? அப்படினா இந்த விதிகளை தெரிஞ்சிக்கோங்க..!!