TNPSC தலைவராக எஸ்.கே.பிரபாகர் பதவியேற்பு..!! ஆறு ஆண்டுகள் இவர்தான்..
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக எஸ்.கே.பிரபாகர் பொறுப்பேற்றார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களை கொண்ட ஒரு அமைப்பாகும்.
தமிழக அரசின் பல்வேறு நிலைகளில் உள்ள அரசுப்பணிகளில் காலியாகும் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் முகமையாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் காலியாகும் இடங்களுக்கு ஏற்ப, தேர்வுப் பட்டியலை முன்னரே வெளியிட்டு, அதன்படி டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்தி வருகிறது. டிஎன்பிஎஸ்சியை பொறுத்தவரை, ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள் அரசின் பரிந்துரைப்படி, ஆளுநரால் நியமிக்கப் படுகின்றனர். தற்போதைய சூழலில் 9 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.
முன்னதாக, தலைவராக இருந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் கடந்த 2022-ம் ஆண்டு பணி மூப்பால் ஓய்வு பெற்றார். இதையடுத்து, 2022-ம் ஆண்டு ஜூன் 10-ம் தேதி முதல், டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களில் ஒருவரான ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சி.முனியநாதன் பொறுப்பு தலைவராக உள்ளார். அதேநேரத்தில் காலியாக இருந்த தலைவர் பதவிக்கு, முன்னாள் போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபுவின் பெயரை தமிழக அரசு பரிந்துரைத்தது. ஆனால் இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து வந்தார். இந்நிலையில், டிஎன்பிஎஸ்சிக்கு தலைவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தன.
தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு டிஎன்பிஎஸ்சிக்கு தலைவராக ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக எஸ்.கே.பிரபாகர் பொறுப்பேற்றார். டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகளை தாமதிக்காமல் விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வர்களுக்கு குழப்பம் ஏற்படுவதை தவிர்க்க வெளிப்படைத்தன்மையுடன் உடனுக்குடன் தகவல் தெரிவிக்கப்படும் என பிரபாகர் தெரிவித்துள்ளார்.
Read more ; பகீர்..!! டாய்லெட்டில் கிடந்த பாம்பு.. திடீரென கேட்ட அலறல் சந்தம்..!! கடைசியில் என்ன ஆச்சு?