பரபரப்பு.. மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை..!! 6 பேர் சுட்டுக் கொலை..
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் முதல்வர் என் பிரேன் சிங் தலைமையிலான பாஜ கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த ஆண்டு மே மாதம் முதல் மோதல் நடந்து வருகிறது. அப்பாவி மக்கள், ராணுவ வீரர்கள் என அவ்வபோது கொல்லப்படுகின்றனர். இந்த மோதல் போக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில், இன்று காலை குக்கி, மெய்தி இனக் குழுக்கள் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டையில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகள் கூறுகையில், ஜிரிபாம் மாவட்ட தலைமையகத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் தனியாக வசித்து வந்த மெய்தி இனத்தைச் சேர்ந்த முதியவரின் வீட்டிற்குள் சனிக்கிழமை அதிகாலை நுழைந்த தீவிரவாதிகள் அவரை சுட்டுக் கொன்றனர்.
இதைத்தொடர்ந்து குக்கி, மெய்தி இனக் குழுக்கள் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த சண்டையில் இருத்தரப்பை சேர்ந்த 5 பேர் பலியானதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். அதில், நான்கு குக்கி சமூகத்தைச் சேர்ந்தவரும், மெய்தி சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டனர். பின்னர், இந்த வன்முறை ரஷீத்புர் வரை தீவிரமடைந்தது. அங்கு காலை 9.50 மணி வரை இடைவிடாத துப்பாக்கிச் சூடு தொடர்ந்தது. இந்த மோதல்கள் காரணமாக அந்த பகுதியில் நிலைமை பதட்டமாக இருந்தது என்று தெரிவித்தன.
Read more ; இந்து மக்களை அவமதிக்கும் முதல்வர் ஸ்டாலின்..! வானதி ஸ்ரீனிவாசன் குற்றச்சாட்டு…!