சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்...! உணவு, குடிநீர் செலுத்த 6 இன்ச் அளவில் 57 மீட்டர் நீளமுள்ள துளை வெற்றி...!
ஒரு வாரத்திற்கும் மேலாக சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் முக்கிய முன்னேற்றமாக, அவர்களுக்கு உணவு, குடிநீர் செலுத்த 6 இன்ச் அளவில் 57 மீட்டர் நீளமுள்ள துளை வெற்றிகரமாக போடப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து நிபுணர்களின் அறிவுரைக்கு ஏற்ப தேவையான உணவுகள் குழாய் மூலம் அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரகாசி, யமுனோத்ரியை இணைக்கும் வகையில் சில்க்யாரா வளைவு - பர்காட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் 60 மீட்டர் தொலைவு சுரங்கப் பாதையில் மண் சரிந்தது. இருபுறமும் மணல் மூடிய நிலையில் சுரங்கப் பாதைக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல நிபுணர்கள் இரவு பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஒரு வாரத்திற்கும் மேலாக சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் முக்கிய முன்னேற்றமாக, அவர்களுக்கு உணவு, குடிநீர் செலுத்த 6 இன்ச் அளவில் 57 மீட்டர் நீளமுள்ள துளை வெற்றிகரமாக போடப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து நிபுணர்களின் அறிவுரைக்கு ஏற்ப தேவையான உணவுகள் குழாய் மூலம் அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.