சிவகார்த்திகேயன் ஒரு சுயநலவாதி..! கூலிப்படையால் உருவாக்கப்பட்டது..! வெளுத்து வாங்கிய பிரபலம்...
விஜயின் goat படத்தில் வரும் டயலாக்கை வைத்து விஜய்யின் அடுத்த கலையுலக வாரிசு சிவகார்த்திகேயன் என்று ஒரு விவாதம் சமூக வலைத்தளங்களில் போயிக்கொண்டிருக்கிறது. இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பிரபல சினிமா விமர்சகர் பிஸ்மி அளித்த பேட்டியில், நடிகர் சிவகார்த்திகேயனை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து பிஸ்மி கூறியுள்ளதாவது, "விஜயின் goat படத்தில் வரும் டயலாக்கை வைத்து விஜய்யின் கலையுலக வாரிசு, சிவகார்த்திகேயன் என்று ஒரு பில்ட்அப் போயிட்டு இருக்கு. இது ஒரு அபத்தமான விஷயமாக தான் எனக்கு தோன்றுகிறது. நடிகர் விஜய்க்கும் சிவகார்த்திகேயனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. கடந்த காலங்களில் கூட எந்த இடத்திலையும் நா விஜய் ரசிகன், விஜயை பார்த்து சினிமாவுக்கு வந்திருக்கேன் என்று சிவகார்த்திகேயன் சொன்னதும் இல்லை, அவருடைய படத்தில் விஜயின் சாயலையும் வைத்ததில்லை.
தற்போது விஜய் அரசியலுக்கு நுழைவதால் சினிமாவில் அவருடைய இடம் காலியாக இருப்பதால் டபக்குன்னு தான் போய் உட்காரவேண்டும் என நினைப்பது, பக்கா சுயநலம். தன்னுடைய சுயநலத்திற்காக இணைய கூலிப்படையை வைத்து இந்த விஷயத்தை பில்ட்அப் பண்ணி எடுத்து வந்துள்ளார். விஜய் 69வது படத்திற்கு பிறகு சினிமாவை விட்டு வெளியேறிய பின் அடுத்த விஜய் யார் என்று ஒரு கேள்வியை எழுப்பி, அதற்கு சிவகார்த்திகேயன் தான் என பதிலையும் கூறி சமூக வலைதளத்தில் அதை பெரிய அளவில் ட்ரெண்ட் பண்ணி வந்திருப்பது யாரென்று கேட்டால், அது சிவகார்த்திகேயனின் இணைய கூலிப்படை தான்.
சிவகார்த்திகேயனுக்கு முன்பு சினிமாவுக்கு வந்த தனுஷ், சிம்பு, விஜய்சேதுபதி இருக்கின்றனர், இவர்கள் யாரும் அந்த விவாதத்திற்குள் வரவில்லை, இவரே எதோ ஒருமனதாக தேர்வு செய்ததைப் போல் ஒரு பில்ட்அப்-யை உருவாக்கியுள்ளார் சிவகார்த்திகேயன். இயக்குனர் வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தின் ஹீரோ யார் என்று கேட்டால் அது சிவகார்த்திகேயன், மேலும் ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனமும் சிவகார்த்திகேயனிடம் டேட் வாங்கியுள்ளது. இதனால் சிவகார்த்திகேயனின் யோசனைப்படி இயக்குனர் வெங்கட் பிரபுவை கருவியாக வைத்து இப்படியொரு விஷயத்தை பயன்படுத்தியுள்ளார் என்று நான் நினைக்கிறேன்.
நேற்று எம்ஜிஆர் இருந்தார், அடுத்து ரஜினி இருந்தாரு, இப்போ விஜய் இருக்காரு, நாளை யார் வேண்டுமானாலும் அந்த இடத்திற்கு வரலாம், ஏன் சிவகார்த்திகேயன் கூட ஒரு வேலை வரலாம், ஆனால் சிவகார்த்திகேயன் தான் அடுத்தது என கூறுவது திட்டமிட்டு ஒரு விஷயம் திணிக்கப்படுகிறது. ஒருவர் வளர்வது என்பது ஆரோக்கியமான ஒன்று. சிவகார்த்திகேயனை பொறுத்தவரை அது வளர்ச்சி இல்லை அது வீக்கம். சொல்லப்போனால் அவர் ஒரு முன்னணி நடிகர் என்பதுப்போல ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
விஜயின் வாரிசாக சிவகார்த்திகேயன் இருக்க முடியாது என்பதற்கு காரணம், விஜயை பொறுத்தவரை தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி. அவரின் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு உள்ளான படங்கள் கூட வசூலில் பட்டையை கிளப்பியிருக்கும். ஆனால் சிவகார்த்திகேயனின் படங்களின் கடந்த வரலாறு அப்படி இல்லை, வெற்றி படங்களே மிகவும் குறைவு, வணிக வெற்றி கொடுக்காத, சிவகார்த்திகேயன் எப்படி ஒரு வசூல் சக்கரவர்த்தியின் வாரிசாக இருக்க முடியும்" என்று கேள்வியும் எழுப்பியுள்ளார் பிஸ்மி.
Read More: உஷார் மக்களே.. இந்தியாவிலும் பரவியது Mpox வைரஸ்..!! – மத்திய அரசு அலர்ட்