For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வெற்றி பட இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்! வெளியான புதிய அறிவிப்பு.!

11:22 PM Nov 19, 2023 IST | 1Newsnation_Admin
வெற்றி பட இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்  வெளியான புதிய அறிவிப்பு
Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மாவீரன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது இவர் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

Advertisement

இந்தத் திரைப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க இருக்கும் இந்த திரைப்படம் ராணுவ வீரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில அயலான் என்ற வித்தியாசமான கதை கொண்ட திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளிவர இருக்கிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புதிய திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி குட்நைட் என்ற வெற்றி திரைப்படத்தை கொடுத்த விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

நடுத்தர மக்களின் குடும்ப வாழ்க்கையை மையமாகக் கொண்ட குட் நைட் திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தத் திரைப்படத்தில் மணிகண்டன், ரமேஷ் திலக், மீதா, ரகுநாத் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement