For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சித்தப்பா மகனுடன் கள்ளத்தொடர்பு..!! கண்டித்த கணவரை முந்திரி தோப்புக்குள் கொன்று எரித்த மனைவி..!!

02:12 PM Nov 06, 2023 IST | 1newsnationuser6
சித்தப்பா மகனுடன் கள்ளத்தொடர்பு     கண்டித்த கணவரை முந்திரி தோப்புக்குள் கொன்று எரித்த மனைவி
Advertisement

அரியலூர் மாவட்டத்தில் வனத்துறைக்குச் சொந்தமான முந்திரி காட்டில் கடந்த வாரம் மனித உடல் ஒன்று எரிந்துக் கொண்டிருப்பதை கண்டு அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, சம்பவம் இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

Advertisement

விசாரணையில், அரியலூர் மாவட்டம் வடகடல் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் சடலம் என்றும், கோயம்பேடு மார்க்கெட்டில் பூ கட்டும் தொழில் செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சுரேஷுக்கும் அவரது மனைவி அனுப்பிரியாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுரேஷின் மனைவி அனுப்பிரியாவிற்கும், அதே பகுதியைச் சேர்ந்த அவரது சித்தப்பா மகன் வேல்முருகன் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் சென்னையில் இருந்து கணவர் சுரேஷை ஊருக்கு வரவழைத்து, அங்கிருந்து விடியற்காலையில் தனது இருசக்கர வாகனத்தில் கொலை செய்யப்போகும் இடத்துக்கு கூட்டிச்சென்றுள்ளார் அனுப்பிரியா. இடம் வந்தவுடன், மயக்கம் வருவது போல் உள்ளது என பைக்கை நிறுத்தி நாடகம் ஆடியுள்ளார் அனுப்பிரியா.

அப்போது, அங்குப் பதுங்கியிருந்த வேல்முருகன், சுரேஷை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை வெண்மான்கொண்டான் பகுதியில் உள்ள முந்திரி காட்டில் சாக்குப் பையில் மூட்டை கட்டிப் போட்டுள்ளனர். மறுநாள் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். தொடர்ந்து கொலையை மறைக்க, இறந்த சுரேஷின் செல்போனை சென்னைக்கே கொண்டுவந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து இறந்த சுரேஷின் மனைவி அனுப்பிரியா மற்றும் அவருடைய ஆண் நண்பர் வேல்முருகன் இருவரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணன் முறை உறவுக்காரருடன் தகாத உறவு வைத்துக் கொண்டு கணவனை மனைவியே கொலை செய்துள்ள சம்பவம் அரியலூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement