முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'நடிகர் சுஷாந்த் சிங் மரணத்திற்கு நீதி கேட்கும் சகோதரி..' - ஆன்லைன் பிரச்சாரம்!

11:39 AM Apr 27, 2024 IST | Mari Thangam
Advertisement

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்திற்கு அவரது சகோதரி ஆன்லைன் பிரச்சாரம் மூலம் நீதி கேட்டுள்ளார்.

Advertisement

தோனியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் மூலம் பிரபலமான நடிகர் சுஷாந்த் சிங் (34). இவர் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி, தான் தங்கியிருந்த அபார்ட்மண்ட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். செய்தியறிந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், சிபிஐ இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதையடுத்து சுஷாந்த் சிங் மரணம், தற்கொலை அல்ல கொலை என்று சுஷாந்த் சிங்கின் நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் குற்றம் சாட்டினர். நான்கு ஆண்டுகள் ஆகியும், சுஷாந்த் சிங் மரணத்தில் உள்ள சந்தேகம் கண்டறியப்படவில்லை. இந்நிலையில், மறைந்த சுஷாந்த் சிங்கின் சகோதரி ஸ்வேதா சிங் கிர்த்தி, தனது சகோதரரின் மரணத்திற்கு நீதி கேட்டு ஆன்லைன் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

ஸ்வேதா சிங் கீர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,  #Nyay4SSRJanAndolan என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கியுள்ளார். இதன் மூலம், தனது சகோதரர் மரணத்திற்கு நீதி கேட்டு வருகிறார். இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, ஸ்வேதா ஒவ்வொருவரும் தங்கள் மணிக்கட்டில் அல்லது நெற்றியில் சிவப்பு துணியைக் கட்டி, மறைந்த தனது சகோதரருக்கு நீதி கிடைக்க அனைவரையும் வீடியோ வெளியிடும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கான விசாரணையை சிபிஐ துரிதப்படுத்தி விரைவில் உண்மையைக் கண்டறிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், தனது சமூகவலைதளப் பதிவில், ”இன்னும் 45 நாட்களில் என் அண்ணன் சுஷாந் மறைந்து 4 ஆண்டுகள் நிறைவடைகிறது. சிபிஐ விரைவில் உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும். இந்த விஷயத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம்.

கடந்த மார்ச் மாதத்திலும், ஸ்வேதா இதுபோல் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், தனது நடிகர்-சகோதரரின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணையை கவனிக்குமாறும் அங்கிருந்து தங்களுக்கு எந்தவொரு தகவலும் வரவில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. சுஷாந்தின் ரசிகர்கள் பலரும் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

Tags :
#Nyay4SSRJanAndolanActor Sushant SinghShweta Singh Keerthy
Advertisement
Next Article