For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"புகையிலையால் வந்த தகராறு.." அண்ணன் மகன், அண்ணி படுகொலை.! போபாலில் நடந்த கொடூரம்.!

11:00 AM Feb 06, 2024 IST | 1newsnationuser4
 புகையிலையால் வந்த தகராறு    அண்ணன் மகன்  அண்ணி படுகொலை   போபாலில் நடந்த கொடூரம்
Advertisement

போபால் நகரில் தனது அண்ணி புகையிலையை தர மறுத்ததால், இரவில் வீடு புகுந்து அண்ணியையும், அவரது 5 வயது மகனையும் கோடரியால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவத்தில் ஈடுபட்ட ரம்லா கோல் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

மத்திய பிரதேசம் மாநிலத்தின், போபால் நகரில் உள்ள ஷாஹ்டோல் மாவட்டத்தில் சுக்கி பாய்(35) மற்றும் அவரது கணவர் நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்தனர். சுக்கி பாய், அதே ஊரில் வசித்து வந்த ரம்லா கோலின் (27) அண்ணி ஆவார். கடந்த சனிக்கிழமை அன்று சுக்கி பாயின் கணவரும், அவரது மூன்று பிள்ளைகளும் கரும்பு ஆலையில் கூலி வேலை செய்ய நர்சிங்பூருக்குச் சென்றிருந்ததால், சுக்கி பாய் தனது 5 வயது மகனுடன் வீட்டில் தனியே இருந்தார்.

ரம்லா கோல் மது அருந்துவிட்டு, தனது அண்ணியின் வீட்டிற்கு வந்து புகையிலையை கேட்டிருக்கிறார். அப்போது வீட்டில் புகையிலை இல்லை என்று கூறியதால் தனது அண்ணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது ரம்லாவின் மனைவி தலையிட்டு, தனது கணவரை வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார்.

ஆத்திரமடங்காத ரம்லா கோல், வீட்டிற்கு சென்று கோடரி ஒன்றை எடுத்துக் கொண்டு இரவு 11 மணி அளவில், தனது அண்ணியின் வீட்டிற்கு வந்திருக்கிறார். சுக்கி பாய் கதவை திறக்க மறுத்ததால் கோடரியை வைத்து கதவை உடைத்து சுக்கி பாயை தாக்கியிருக்கிறார். மேலும் அவரது 5 வயது மகன் கரன் கோல், தலையிட்டபோது அவரையும் கோடரியை வைத்து வெட்டி சாய்த்து இருக்கிறார்.

தகவல் அறிந்த, பியோஹரி காவல் நிலையத்தில் உள்ள துணைப் பிரிவு காவல்துறை அதிகாரி (SDOP), ரவி பிரகாஷ் தனது குழுவுடன் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்துள்ளார். போலீசார் தாக்கப்பட்ட இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் சுக்கி பாயின் 5 வயது மகன் இறந்துவிட்டதாகவும், சுக்கி பாயின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

புகையிலை தர மறுத்தது, கொலை செய்வதற்கு ஒரு தூண்டுகோலாகவே இருந்திருக்கிறது என்றும், இரண்டு குடும்பத்திற்கும் முன் பகை உள்ளது என்றும், காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். தப்பி ஓடிய குற்றவாளியை, கடந்த திங்கட்கிழமை போலீசார் மடக்கிப் பிடித்தனர். இந்திய தண்டனைச் சட்டம் 302இன் கீழ் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியது.

Tags :
Advertisement