வடிவேலுவை கடுமையாக தாக்கி பேசிய சிங்கமுத்து..!! சென்னை ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு..!!
நடிகர் வடிவேலு தாக்கல் செய்த வழக்கில், நடிகர் சிங்கமுத்து பதிலளிக்க 2 வாரம் கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதாக கூறி ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வடிவேலு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், ”பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில், என்னைப் பற்றி துளி கூட உண்மையில்லாத பல பொய்களைக் கூறி வருகிறார். எனவே, சிங்கமுத்து ரூ. 5 கோடியை எனக்கு நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், என்னைப் பற்றி அவதூறு பரப்ப சிங்கமுத்துவுக்கு தடை விதிக்க வேண்டும்” என வடிவேலு கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் கே.ஜி.ரகுநாதன், என்.செந்தில்குமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இதையடுத்து, இந்த வழக்கில் நடிகர் சிங்கமுத்து இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
இந்நிலையில், நடிகர் சிங்கமுத்து பதிலளிக்க அவகாசம் கோரியிருந்தார். எனவே, அவரின் கோரிக்கையை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், பதில் அளிக்க சிங்கமுத்துவுக்கு இரண்டு வார காலம் அவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.