"பேச்சிலர்ஸ் ஸ்பெஷல்" சிம்பிளான சுவையான தயிர் குழம்பு ரெசிபி இதோ.!
எப்போதுமே சாம்பார், ரசம், பருப்புன்னு சாப்பிட்டு போர் அடிக்குதா.? வாங்க இன்னைக்கு சிம்பிளா தயிர் குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம். இதன் செய்முறையும் எளிது மற்றும் சுவையும் அருமையாக இருக்கும்.
முதலில் 1/4 லிட்டர் தயிரை தண்ணீர் ஊற்றி கலக்கி வைத்துக்கொள்ளவும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி அது நன்றாக சூடானதும் 1/2 டீஸ்பூன் கடுகு, 1 காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, சிறிது இஞ்சி மற்றும் 2 பல் பூண்டு சேர்த்து 2 நிமிடத்திற்கு நன்றாக வதக்க வேண்டும். இவற்றை நன்றாக வதக்கிய பின் இதனுடன் ஒரு நறுக்கிய வெங்காயம் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கிளறி விடவும். அதோடு இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
இதை ஒரு நிமிடத்திற்கு நன்றாக வதக்கிய பின் இதனுடன் தக்காளி சேர்த்து இரண்டையும் நன்றாக வதக்க வேண்டும். தக்காளி மற்றும் வெங்காயம் நன்றாக மசிந்த பின்பு 1/4 டீஸ்பூன் மஞ்சள் சேர்த்து நன்றாக கிளறி விட்டு அவற்றுடன் மல்லி இலை சேர்த்து நன்றாக வதக்கிய பின்பு அடுப்பை அனைத்து விட வேண்டும். இவற்றை சிறிது நேரம் ஆற விடவும்.
சூடு நன்றாக ஆறிய பின் இதனுடன் அடித்து வைத்த தயிர் சேர்த்து நன்றாக கலக்கினால் அருமையான தயிர் குழம்பு தயார். இது சோறு மற்றும் சிக்கன் குழம்பு ஆகியவற்றிற்கு சிறந்த சைடு டிஷ் ஆக இருக்கும்.