இந்த அறிகுறிகள் உங்க கிட்ட இருக்கா.? நீங்க இனிப்பு சாப்பிடுவதை நிறுத்தி ஆகணும்.!
இனிப்பு சுவை என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. தித்திப்பான உணவுகளையும் தின்பண்டங்களையும் சாப்பிடுவதை அனைவரும் விரும்புவோம். எனினும் அதிகமான இனிப்பு சுவை கொண்ட பொருட்களை சாப்பிடும் போது நீரிழிவு நோய் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். எனவே ஒருவர் அதிக அளவு இனிப்பு சாப்பிடுகிறார் என்றால் அவரது உடலில் சில அறிகுறிகள் தோன்றும். இவற்றை வைத்தே அந்த நபர் அதிக இனிப்புகளை சாப்பிடும் பழக்கம் கொண்டவர் என்பதை அறிந்து கொள்ளலாம். அவை எந்த அறிகுறிகள் என இந்த பதிவில் பார்ப்போம்.
அதிகமான சர்க்கரை உணவை சாப்பிடுபவர்கள் உடல் எடை அதிகரிக்கும். இதன் மூலம் அவர்கள் அதிக இனிப்பை எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். ஏனெனில் இனிப்பு பலகாரங்களில் கலோரிகள் அதிகமாக இருக்கும். இனிப்பு அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு அடிக்கடி சரும பிரச்சனைகள் ஏற்படும். முகப்பரு எண்ணெய் பசை மற்றும் முக வறட்சி போன்ற பிரச்சனைகளும் உருவாகும். சர்க்கரையை அதிகமாக சாப்பிடும் பொழுது சுவை மொட்டுக்கள் பலவீனமாகும். இதன் மூலம் மற்ற பொருட்களை சாப்பிடும் போது சுவை தெரியாது. மேலும் இனிப்பு அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு தோன்றும்.
இனிப்பு அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு கவன சிதறல் ஏற்படும். ரத்தத்தில் இருக்கக்கூடிய அதிகமான சர்க்கரையின் அளவு மூளை செல்கள் குளுக்கோஸ் உறிஞ்சப்படுவதை தடுக்கும். இதன் காரணமாக மூளைக்கு தேவையான ஆற்றல் கிடைக்காது. இனிப்பை அதிகமாக தொடர்ந்து எடுத்துக் கொள்பவர்களுக்கு கண்பார்வை மங்கலாகும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் உடல் வறட்சித் தன்மை அடையும். இதன் காரணமாக கண்கள் வறண்டு பார்வை மங்கலாகும். நீங்கள் எவ்வளவு தான் சாப்பிட்டாலும் முழுவதுமாக சாப்பிட்டது போன்ற உணர்வு ஏற்படாது. உங்களுக்கு தொடர்ந்து பசி எடுத்துக் கொண்டே இருக்கும். இவையெல்லாம் அதிகமாக இனிப்பு சாப்பிடுகிறோம் என்பதை உணர்த்தும் சில அடிப்படை அறிகுறிகள் ஆகும்.