பேரழிவுக்கான அறிகுறிகள்?. இடிந்து விழுந்த மெக்சிகோ பிரமிடு!. சாபமாக பார்க்கும் பழங்குடியினர்!
Mexican pyramid: மெக்சிகோவில் பண்டைய கால பழங்குடியினர், நரபலிக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் பிரமிட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்த சம்பவம் பேரழிவுக்கான அறிகுறியா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அறிக்கையின்படி, கடந்த ஜூலை 30ம் தேதி பெய்த கனமழையால் 2 பிரமிடுகளில் ஒன்று இடிந்து விழுந்தது, இது நவீன புரேபெச்சா மக்களின் மூதாதையர்களால் கட்டப்பட்டது. இது பூமியில் அழிவின் அறிகுறி என்று அதைக் கட்டிய பழங்குடியினரின் சந்ததியினர் கூறுகிறார்கள். இந்த பிரமிடுகள் இப்போது திடீரென இடிந்துள்ள நிலையில், அவை விரைவில் நடக்கப் போகும் அழிவைக் குறிக்கும் வகையில் இருப்பதாகவும், இதை இயற்கைக்கு அப்பாற்பட்ட அறிகுறி என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
யக்காத பிரமிடுகள் என்று அழைக்கப்படும் இவை மைக்கோகன் மாகாணத்தில் காணப்படுகிறது. இந்த பிரமிடுகள் இப்போது சேதமடைந்துள்ள நிலையில், இவை அடுத்து ஏற்படப் போகும் இயற்கை பேரழிவையே குறிப்பதாகப் பழங்குடியினர் எச்சரிக்கிறார்கள். இந்த இடத்தில் முதலில் அஸ்டெக் இன மக்கள் வாழ்ந்து வந்தனர்.
அவர்களை வீழ்த்திய புரேபெச்சா பழங்குடியினர் சுமார் 400 ஆண்டுகளுக்கு இந்த பகுதியை ஆட்சி செய்தனர். அந்தக் காலகட்டத்தில் தான் இந்த பிரமிடுகள் கட்டப்பட்டன. அதைத் தொடர்ந்து 1519இல் ஸ்பெயின் படையினர் இந்த இடத்தை ஆக்கிரமித்தனர். ஸ்பெயின் படை இங்கு வருவதற்கு முன்பும் இந்த பிரமிடுகள் இதேபோல இடிந்தன. எனவே, அதைக் குறிப்பிடும் இங்குள்ள பழங்குடியினர் மீண்டும் ஒரு மிக மோசமான பாதிப்பு ஏற்படப் போவதையே இது குறிப்பதாகக் கூறுகின்றனர்.
இது தொடர்பாக மெக்சிகோ அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தொல்லியல் மண்டலத்தில் அமைந்த பிரமிடுகளில் ஒன்றின் முகப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புரேபெச்சா பகுதியில் திடீரென ஏற்பட்ட மழை காரணமாகவே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்பு இங்கு நிலவிய கடும் வறட்சியால் பிரமிடுகளில் விரிசல்கள் ஏற்பட்டன. இதனால் மழையின் போது தண்ணீர் பிரமிடுகளில் நுழைந்தன. இதன் காரணமாகவே பிரமிடுகள் இடிந்தன.
Readmore: கொல்கத்தா பெண் மருத்துவர் கற்பழித்து கொலை!. பதிலளிக்கப்படாத 15 கேள்விகள்!. அதிர்ச்சி!