காசோலையின் பின்புறம் கையெழுத்து எதுக்கு போடுறாங்க.? காரணம் மற்றும் விளக்கம்.!
வங்கி கணக்கு மற்றும் பணப்பரிமாற்றம் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. இன்றைய நவீன உலகில் பணப்பரிமாற்றம் மிகவும் கொண்டிருக்கிறது. பெரும்பாலான நெட் பேங்கிங் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் மூலம் எளிமையாக்கப்பட்டு இருக்கிறது. வங்கி கணக்கு துவங்குவதை தவிர நாளைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது. ஒவ்வொரு குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் பணம் எடுப்பதற்கு காசோலை அத்தியாவசியமாகிறது.
எனினும் இவற்றிற்கு என்று ஒரு கட்டுப்பாடு மற்றும் குறிப்பிட்ட அளவுத் தொகை என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது மேலும் ஏடிஎம் இயந்திரங்களின் மூலம் பணம் எடுக்க வேண்டும் என்றாலும் ஒரு நாளைக்கு வழங்கப்பட்டிருக்கும் நிர்ணயிக்கப்பட்ட அளவை தாண்டி பணம் எடுக்க முடியாது. இதனால் வங்கிக்கு சென்று காசோலை மூலமாக பணம் எடுப்பதுதான் அனைவருக்கும் சிறந்த வழியாக இருக்கிறது. பொதுவாக வங்கிக்கு சென்று காசோலையின் மூலம் பணம் எடுக்கும் போது அதற்குப் பின்புறம் கையெழுத்திடுவதை பார்த்திருப்போம். எதற்காக இந்த கையொப்பம் பெறப்படுகிறது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
பொதுவாகவே வங்கிகளில் பணம் எடுப்பதற்கு வங்கிக் கணக்கில் பெயர் உள்ளவர் செல்லலாம். அல்லது அவரது உறவினரோ தெரிந்தவர்கள் சென்று அந்த நபருக்காக பணம் எடுக்கலாம். இவ்வாறு ஒரு நபரின் வங்கி கணக்கிற்கு வேறொரு நபர் சென்று காசோலையின் மூலம் பணம் எடுப்பது தான் பியறர்(bearer) செக் என்று அழைக்கப்படுகிறது. அதாவது வேறொரு நபரின் வங்கிக் கணக்கில் அவரது ஒப்புதலுடன் இன்னொரு நபர் சென்று பணம் எடுப்பது. இதற்கு அந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் நபர் காசோலையில் முன்பக்கம் கையெழுத்து இடுவதோடு காசோலையின் பின்புறமும் கையெழுத்து இடவேண்டும். மேலும் பணம் எடுக்கும் நபரும் காசோலையின் பின்புறம் கையொப்பமிட்டு செல்போன் நம்பரையும் எழுத வேண்டும். இதன் மூலம் வங்கிக் கணக்கில் பணம் வைத்திருப்பவரின் முழு சம்மதத்துடனே இந்த பண பரிவர்த்தனை நடந்தது என்பதை உறுதி செய்வதற்காக காசோலையின் பின்புறம் கையெழுத்திடும் முறை பின்பற்றப்படுகிறது.
காசோலை ஒருவரது பெயரில் கொடுக்கப்படும் போது அல்லது வங்கியில் கணக்கு வைத்திருக்கும் நபரை சென்று காசோலை மூலம் பணத்தை எடுக்கும் போது அது ஆர்டர் செக் என அழைக்கப்படுகிறது. இந்த முறையில் காசோலையின் பின்புறம் கையொப்பம் இடவேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் நபர் அவரது வங்கி கணக்கில் இருந்து காசோலை மூலம் பணம் எடுக்கிறார் என்பதை உறுதி செய்த பின்னரே வங்கி பணப்பரிவர்த்தனையை நிகழ்த்துகிறது. இதனால் பின்புறம் கையொப்பம் இட வேண்டிய அவசியம் இல்லை.