நீருக்கடியில் கிடைத்த சிக்னல்!. காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் மர்மம் விலகுமா?
Malaysian Airlines ( MH370): 10 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் ( MH370) விமானத்தின் இறுதிக்கட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய ஒலி சமிக்ஞையை தெற்கு இந்தியப் பெருங்கடலின் நீருக்கடியில் கண்டுபிடித்துள்ளதாக இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
MH370 எனும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 2014-ஆம் ஆண்டு மார்ச் 8 ம் தேதி தலைநகர் கோலாலம்பூறில் இருந்து சீனாவின் தலைநகரம் பெய்ஜிங்கிற்கு சென்றுகொண்டிருந்தபோது மாயமானது. இந்த விமானம் காணாமல் போனதில் 239 பயணிகள் மற்றும் பணியாளர்கள் உயிரிழந்தனர். மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370 காணாமல் போனது 21 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய மர்மங்களில் ஒன்றாக மாறியது. அதில் பல சதி கோட்பாடுகள் இணைக்கப்பட்டுள்ளன. சிலர் விமானம் கடத்தப்பட்டதாகக் கூறினர், மற்றவர்கள் விண்வெளியில் இருந்து ஏலியன்கள் இதில் ஈடுபட்டு இருக்கலாம் என ஊகித்தனர்.
மேலும், மலேசிய விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பாக கடந்த 2022ம் ஆண்டில் சில புதிய ஆதாரங்கள் வெளிவந்ததாகவும். விபத்தின் போது கடலில் சிதறிய விமான பாகங்கள் கிடைத்துள்ளன என்றும் அதன்படி, MH370 விமானிகள் வேண்டுமென்றே விமானத்தை விபத்துக்குள்ளாக்கியிருக்கலாம் என்று கூறப்பட்டது. அதாவது, MH370 மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் காணாமல் போன எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு நவம்பரில் மடகாஸ்கன் மீனவர் ஒருவரின் வீட்டில் போயிங் 777 விமானத்தின் தரையிறங்கும் கதவு உட்பட சில குப்பைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாயின.
இந்தநிலையில், 10 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் ( MH370) விமானத்தின் இறுதிக்கட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய ஒலி சமிக்ஞையை தெற்கு இந்தியப் பெருங்கடலின் நீருக்கடியில் கண்டுபிடித்துள்ளதாக இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். டெய்லி மெயிலின் அறிக்கையின்படி, மார்ச் 8, 2014 அன்று போயிங் 777 விபத்துக்குள்ளானதாக நம்பப்படும் நேரத்தில் விமான பயணத்தின் இறுதிக் கட்டத்தில் இருந்து நீருக்கடியில் ஹைட்ரோஃபோன் ஒலி சமிக்ஞையை அடையாளம் கண்டுள்ளதாக கூறினர். இந்த ஹைட்ரோஃபோன்கள் எனப்படும் நீருக்கடியில் ஒலிவாங்கிகள், 6 வினாடி சிக்னலை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.
MH370 போன்ற 200 டன் விமானம் ஒரு வினாடிக்கு 200 மீட்டர் வேகத்தில் விமானம் விபத்துக்குள்ளானால் சிறிய நிலநடுக்கத்துடன் ஒப்பிடக்கூடிய இயக்க ஆற்றலை உருவாக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்த ஆற்றல், ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் அமைந்துள்ள ஹைட்ரோஃபோன்களால் கண்டறியப்படும் அளவுக்கு குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்றும் உத்தியோகபூர்வ தேடல் மண்டலத்தின் 7 வது ஆர்க் பகுதி - அங்கு MH370 விபத்துக்குள்ளானதாகக் கருதப்படுகிறது.
இது கேப் லீவினில் உள்ள ஒரு ஹைட்ரோகோஸ்டிக் நிலையத்தில் இருந்து 2,000 கிமீ தொலைவில் உள்ளது. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட ஆறு வினாடி சமிக்ஞை, இந்தியப் பெருங்கடலின் அடிப்பகுதியில் இருப்பதாகக் கருதப்படும் விமானத்தின் இடிபாடுகளுக்கு வழிவகுக்கும் என்பதைத் தீர்மானிக்க கூடுதல் சோதனை தேவைப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Readmore: கொரோனாவை விட கொடிய வைரஸ்..!! யாராலும் தடுக்க முடியாது..!! எச்சரிக்கும் அமெரிக்கா..!!