For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Corona தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகள்..!! இது உயிருக்கே ஆபத்தாம்..!! ஆய்வு முடிவில் அதிர்ச்சி..!!

05:56 PM Feb 22, 2024 IST | 1newsnationuser6
corona தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகள்     இது உயிருக்கே ஆபத்தாம்     ஆய்வு முடிவில் அதிர்ச்சி
Advertisement

கொரோனா வேக்சின் எடுத்துக் கொள்ளும் நோயாளிகளிடையே சில வகையான பக்க விளைவுகள் அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

Advertisement

ஒட்டுமொத்த உலகையும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டிப்படைத்த பாதிப்பு என்றால், அது கொரோனா தான். உலகின் பல்வேறு நாடுகளிலும் பொதுமக்கள் கொரோனாவால் கொத்து கொத்தாக உயிரிழந்தனர். பிறகு கொரோனா வேக்சின் உள்ளிட்ட பணிகளைத் தொடர்ந்தே கொரோனா பாதிப்புகள் கட்டுக்குள் வந்தன. இப்போது அனைத்து நாடுகளிலும் கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டன. அதேநேரம் கொரோனா வேக்சின் குறித்த விவாதம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

இதற்கிடையே, கொரோனா வேக்சின் தொடர்பாக புதிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. சுமார் 9.9 கோடி பேரிடம் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். கொரோனா வேக்சின் எடுத்துக் கொள்ளும் போது அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து இதில் ஆய்வு செய்துள்ளனர். அதில் குய்லின் பார்ரே சிண்ட்ரோம், மயோர்கார்டிடிஸ், பெரிகார்டிடிஸ் மற்றும் செரிப்ரல் வெனஸ் சைனஸ் த்ரோம்போசிஸ் ஆகிய பாதிப்புகள் 1.5 மடங்கு அதிகமாக ஏற்படுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஏற்கனவே உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐரோப்பிய மருந்துகள் ஏஜென்சிகள் இதை எச்சரித்திருந்த நிலையில், இந்த ஆய்வும் அதை உறுதி செய்துள்ளது. கொரோனா வேக்சின் எடுத்துக்கொள்ளும் இந்த பக்க விளைவுகளை அவர்கள் உறுதி செய்துள்ளனர். பொதுவாக ஒரு வேக்சின் தயாரிக்கும் போது அவை பல ஆண்டுகள் வரை சோதனை செய்யப்படும். ஆனால், கொரோனா வேக்சின் வெறும் சில மாதங்களில் அத்தனை சோதனையும் முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டது. எனவே, அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

குய்லின்-பார் சிண்ட்ரோம் என்பது நமது நோயெதிர்ப்பு அமைப்பே நரம்புகளைத் தாக்கும் ஒரு பிரச்சனையாகும். இந்த வகை பாதிப்பு சில நேரங்களில் நமக்கு ஆபத்தாகவும் மாறிவிடும். மேலும், இது தசை சேதத்தை ஏற்படுத்தும். நீண்டகால சிகிச்சையைக் கூட தேவைப்படும். சிவிஎஸ்டி என்ற வகை பக்க விளைவு ஏற்படும் போது அது மூளையில் ரத்தக் கட்டிகளைக் கூட உருவாக்கும். கொரோனா வேக்சின் ஏற்படுத்தும் மயோர்கார்டிடிஸ் மற்றும் பெரிகார்டிடிஸ் ஆகியவை இதய திசுக்களின் வீக்கம் ஆகும். இவை அனைத்தும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். சில நேரங்களில் உயிருக்கே கூட ஆபத்தாக முடியலாம்.

அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பின்லாந்து, பிரான்ஸ், நியூசிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து என பல்வேறு நாடுகளில் செய்த ஆய்வில் இதில் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வேக்சின் எடுத்துக் கொண்டவர்களில் மிகக் குறைவான நபர்களுக்கே இந்த ஆபத்து ஏற்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா வேக்சின் செலுத்தப்பட்டர்களில் இதுவரை 92,003 பேருக்குப் பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை நாடாளுமன்றத்தில் கூறியிருந்தது. இது கொரோனா வேக்சின் எடுத்துக் கொண்டவர்களில் 0.009%ஆக ஆகும். அதேநேரம் ஒப்பீட்டளவில் பார்க்கும் போது அமெரிக்காவில் வேக்சின் எடுத்துக் கொண்டவர்களில் 0.2% பேருக்கும் பிரிட்டனில் 0.7% பேருக்கும் பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளது.

அதேநேரம் இது மிகவும் துல்லியமானது என்றும் நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனென்றால் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகளில் பக்க விளைவுகள் ஏற்படும் போது அதை உடனடியாக ரிபோர்ட் செய்வார்கள். ஆனால், இந்தியாவில் பக்க விளைவுகள் ஏற்படும் போது அதை ரிப்போர்ட் செய்வதும் குறைவு என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Read More : Kerala | இனி ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் சம ஊதியம்..!! முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு..!!

Advertisement