For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவு..!! நிறுவனமே ஒப்புக்கொண்டதால் அதிர்ச்சி..!!

05:04 PM Apr 30, 2024 IST | Chella
கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவு     நிறுவனமே ஒப்புக்கொண்டதால் அதிர்ச்சி
Advertisement

கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாகவே பக்க விளைவுகள் ஏற்படலாம் என அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

Advertisement

முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா பின்னர் உலக முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. பின்னர் கொரோனா வைரஸை ஒழிக்கவும், மேலும் பரவாமல் தடுக்கவும் உலக நாடுகள் பல்வேறு தடுப்பூசிகளை கண்டுபிடித்தன. அதில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து தடுப்பூசியை உருவாக்கின. இந்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டது.

இந்தியா மட்டுமின்றி, மற்ற நாடுகளிலும் இந்த தடுப்பூசி தான் கொரோனா தடுப்பூசியாக போடப்பட்டது. குறிப்பாக, இந்தியாவில் சுமார் 174.94 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு அரிதாகவே பக்க விளைவுகள் ஏற்படலாம் என அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. அதாவது, கோவிஷீல்டு தடுப்பூசியால் இறப்புகள் மற்றும் உள்உறுப்புகளில் பாதிப்புகள் ஏற்படுவதாக இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கோவிஷீல்டு தடுப்பூசியால் உயிரிழப்புகள், பக்க விளைவுகள் ஏற்பட்டதாக 51 வழக்குகள் விசாரணையில் உள்ளன.

இதுதொடர்பான விசாரணையின்போது, கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான சந்தர்ப்பங்களில் ரத்த உறைவு மற்றும் பிளேட்லெட் எண்ணிக்கையை குறைத்தல் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் எனவும் நீதிமன்றத்தில் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Read More : நொந்துபோன செந்தில் பாலாஜி..!! 36-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!!

Advertisement