திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லையா? அப்போ உடனே இதை செய்யுங்க.. ஆதிகாலத்தில் பின்பற்றப்பட்ட சித்த வைத்தியம்!!
நாகரீகமும் அறிவியலும் பெருகி உள்ள இந்த காலகட்டத்தில், குழந்தை இல்லாமல் காத்திருப்பவர்கள் அநேகர். ஆம், வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றம் போன்ற பல காரணங்களால் பலருக்கு குழந்தை இருப்பது இல்லை. இதனால் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் பெருகி விட்டது. எப்படியாவது தங்களுக்கு ஒரு குழந்தை பிறந்து விடாதா என்று ஏங்கி நிற்கும் தம்பதிகளின் ஆசையை நிறைவேற்றுவதாக கூறி, பல லட்சங்களை செயற்கை கருத்தரிப்பு மையங்கள் சம்பாதித்து வருகின்றன.
நீங்களும் அதே சுழலில் இருந்தால் இனி கவலை பட வேண்டாம். ஆதிகாலத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்க செய்யப்பட்ட சித்த மருத்துவம் பற்றி மருத்துவர் கூறியுள்ளார். அவர் கூறுகையில், முதலில் 5 நெல்லிகாய் எடுத்துக் கொள்ள வேண்டும். முடிந்த வரை நாட்டு நெல்லிகாய் எடுத்துக் கொள்ளலாம். அதில் இருக்கும் கொட்டையை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். இப்போது அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து, அதில் 8 டப்ளர் தண்ணீரை ஊற்றி, அதனுடன் நறுக்கிய நெல்லிகாய், மற்றும் 3-4 ஸ்பூன் சீரகத்தை போட்டு கொதிக்க விடவும்.
பின்னர் அந்த பாத்திரத்தை மூடி வைத்து இரவு முழுவதும் ஊறவிடவும். தொடர்ந்து, காலையில் அடுப்பை சிம்மில் வைத்து அந்த தண்ணீரை 2 பேர் குடிக்கும் அளவிற்கு, 2 டம்ளர் அளவு வரை சுண்ட வைக்க வேண்டும். பின்னர் அந்த தண்ணீரை வடிக்கட்டி கணவன், மனைவி ஒரு டம்ளர் குடிக்க வேண்டும். இப்படி செய்வதால் கட்டாயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என மருத்துவர் கூறியுள்ளார்.
Read more: பரம்பரையாக ஏற்படும் புற்றுநோயை தடுக்க முடியுமா?? நிபுணர் அளித்த அதிர்ச்சி தகவல்..