பருவ வயதுப்பெண்களின் ரத்தசோகையை சித்தா மருந்து கலவை குறைக்கிறது!. ஆய்வில் நிரூபணம்!.
Siddha' drugs: 'சித்தா' மருந்துகளின் கலவையானது, பருவ வயதுப் பெண்களின் இரத்த சோகையை குறைக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
PHI-Public Health ஐ நடத்தும் ஆராய்ச்சியாளர்களால் புகழ்பெற்ற இந்திய பாரம்பரிய அறிவு இதழில் (IJTK) வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வின்படி, தேசிய சித்தா இன்ஸ்டிடியூட், தமிழ்நாட்டின் சேவியர் ஆராய்ச்சி அறக்கட்டளை, தமிழ்நாட்டின் வேலுமயிலு சித்த மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். இவர்கள், அன்னபேதி செந்தூரம், பாவன கடுக்காய், மாதுளை மணப்பாகு, நெல்லிக்காய் லேகியம் ஆகியவற்றைக் கொண்I ஏபிஎன்எம் என்கிற கலவை சித்தா மருந்தை தயாரித்துள்ளனர். இந்த மருந்து 2,648 சிறுமிகளுக்கு தரப்பட்டது.
இதில் 2,300 மாணவிகள் 45 நாள் தொடர்ச்சியாக மருந்தை உட்கொண்டுள்ளனர். அவர்களில் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 283 சிறுமிகளிடம் நடத்திய சோதனையில், அவர்களின் ஹீமோகுளோபின் அளவு, பிசிவி, எம்சிவி, எம்சிஎச் அளவுகள் கணிசமாக மேம்பட்டுள்ளன. மேலும், சோர்வு, முடி உதிர்தல், தலைவலி, ஆர்வம் குறைதல் மற்றும் சீரற்ற மாதவிடாய் போன்ற ரத்த சோதனையின் பாதிப்புகளையும் இந்த சித்தா மருந்து கலவை குறைத்துள்ளது நிரூபணமாகி உள்ளது.