For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நள்ளிரவில் உடல்நலக்குறைவு!. பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி!

Sick in the middle of the night! Senior BJP leader Advani admitted to hospital!
05:35 AM Jun 27, 2024 IST | Kokila
நள்ளிரவில் உடல்நலக்குறைவு   பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி
Advertisement

LK Advani: இந்தியாவின் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானி, உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

96 வயதான எல்.கே. அத்வானிக்கு வயது மூப்பு காரணமாக நள்ளிரவில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவரது உடல்நிலை சீராக இருக்கிறது எனவும் தொடர்ந்து மருத்துவர்கள் கணகாணித்து வருகின்றனர். எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில், மத்திய அரசு அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கியது. அவரது இல்லத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு விருதை வழங்கினார்.

எல்.கே.அத்வானி யார்? நவம்பர் 8, 1927ல் பாகிஸ்தான் கராச்சியில் பிறந்த அத்வானி, 1942 இல் ஸ்வயம்சேவகராக ஆர்எஸ்எஸ்ஸில் சேர்ந்தார். 1986 முதல் 1990 வரை பாஜக தேசியத் தலைவராகவும், பின்னர் 1993 முதல் 1998 வரையிலும், 2004 முதல் 2005 வரையிலும் பணியாற்றினார். 1980 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து மிக நீண்ட காலம் கட்சியின் தலைவராக பணியாற்றினார்.

ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக பாராளுமன்ற வாழ்க்கையை முடித்துக்கொண்டு, எல்.கே. அத்வானி முதலில் உள்துறை அமைச்சராகவும், பின்னர், அடல் பிஹாரி வாஜ்பாய் (1999-2004) அமைச்சரவையில் துணைப் பிரதமராகவும் இருந்தார். 10 டிசம்பர் 2007 அன்று, பிஜேபியின் நாடாளுமன்ற வாரியம் 2009 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல்களில் அத்வானியை பிரதமர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் 2009 பொதுத் தேர்தலில் காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற்றபோது,அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் ​​15வது மக்களவையில் எதிர்க்கட்சி தலைவராக வருவதற்கு வழி வகுத்தார்.

Readmore: புனேவில் 15 வயது சிறுமி உட்பட இருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டுபிடிப்பு..! அறிகுறிகள் என்னென்ன..!

Tags :
Advertisement