முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கரன்ட் கட்...? அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்...!

05:50 AM Apr 21, 2024 IST | Vignesh
Advertisement

சென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட், 2-வது நிலையின் இரு அலகுகளில் தலா 600 மெகாவாட் என 1,830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் இரண்டாம் அலகில் உள்ள கொதிகலன் பழுது ஏற்பட்டுள்ளது.

தற்போது 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பழுது நீக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஓரிரு நாளில் பணிகள் முடிந்து, 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்படும் என அனல் மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Power plantvada chennai
Advertisement
Next Article