450 கோடி சிட்-பண்ட் ஊழல்.. சுப்மான் கில் உட்பட 4 இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு CID சம்மன்..!!
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர்கள் சிட்பண்ட் மோசடி விசாரணையில் சிக்கியுள்ளனர். 450 கோடி சிட்பண்ட் மோசடி தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஷுப்மான் கில், ராகுல் தெவாடியா, மோகித் சர்மா மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோருக்கு குஜராத் காவல்துறையின் சிஐடி குற்றப்பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. குஜராத்தைச் சேர்ந்த நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு வங்கிகளை விட அதிக வட்டி விகிதங்களை தருவதாக உறுதியளித்தது. ஆனால், பல முதலீட்டாளர்கள் தங்கள் வட்டியைப் பெறவில்லை என்று நிறுவனம் மீது புகார் அளித்தனர்.
இந்த மோசடியில் மூளையாக இருந்த பூபேந்திர சிங் ஜாலாவிடம் விசாரணை நடத்திய பிறகு 4 வீரர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வீரர்கள் முதலீடு செய்த பணத்தை திருப்பி தரவில்லை என்று ஜாலா தெரிவித்தார். கில் ரூ.1.95 கோடி முதலீடு செய்துள்ளதாகவும், மற்ற வீரர்கள் குறைவாக முதலீடு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கில் தற்போது பார்டர்-கவாஸ்கர் டிராபிக்காக (BGT) ஆஸ்திரேலியாவில் இருப்பதால், அவர் வந்த பிறகு CID விசாரணை நடைபெறும் என கூறப்படுகிறது.
ஜாலாவின் கணக்குகளை கையாண்ட ருஷிக் மேத்தாவிடம் சிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதிகாரிகள் கூறுகையில், மேத்தாவுக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் ஜாலாவால் பராமரிக்கப்படும் அதிகாரப்பூர்வமற்ற கணக்குகளை ஆய்வு செய்ய கணக்காளர்கள் குழுவை நியமித்துள்ளோம். மேலும் பல்வேறு இடங்களில் சோதனைகள் தொடர்கின்றன. பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுளது எனத் தெரிவித்தார்.
Read more ; விந்தணு ஃபேஷியல்.. நடிகைகளின் அழகு ரகசியம் இதுதானா..!