For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஒரே படத்தில் கவனம் ஈர்த்த ஹீரோயின்..!! இன்ஸ்டாவில் மோடியை தொடர்ந்து ப்ரியங்கா சோப்ராவை ஒவர் டேக் செய்த ஷ்ரத்தா கபூர்..!!

Shraddha Kapoor followed Modi and over-tagged Priyanka Chopra on Instagram.
07:32 PM Aug 25, 2024 IST | Mari Thangam
ஒரே படத்தில் கவனம் ஈர்த்த ஹீரோயின்     இன்ஸ்டாவில் மோடியை தொடர்ந்து ப்ரியங்கா சோப்ராவை ஒவர் டேக் செய்த ஷ்ரத்தா கபூர்
Advertisement

இந்தியாவில் உள்ள பிரபலங்களில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக ஃபாலோவர்களைக் கொண்டவர்கள் என்றால் அதில் விராட் கோலியின் பெயரும் பிரியங்கா சோப்ராவின் பெயரும் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றது. இது மட்டும் இல்லாமல் இந்த வரிசையில் பிரதமர் மோடி மூன்றாவது இடத்தில் இருந்தார்.

Advertisement

கிரிக்கெட் வீரர் விராட் கோலியை இன்ஸ்டாகிராமில் 271 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். இவருக்கு அடுத்த இடத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளார். இவரை இன்ஸ்டாகிராமில் 91.8 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். இவர்களைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் 91.3 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டு பிரதமர் மோடி இருந்தார். சில தினங்களுக்கு முன்பு மோடியை பின்னுக்கு தள்ளி, மூன்றாவது இடத்தை பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் பிடித்தார்..

இந்நிலையில் இன்ஸ்டாவில் அதிக ஃபாலோயர்ஸ்களை பெற்ற இந்தியர்களின் பட்டியலில், இரண்டாவது இடத்தில் இருந்த ப்ரியங்கா சோப்ராவை பின்னுக்குத் தள்ளி நடிகை ஷ்ரத்தா கபூர் அந்த இடத்தை பிடித்துள்ளார். ப்ரியங்கா சோப்ரா 9.18 கோடி ஃபாலோயர்ஸ்களை பெற்றுள்ள நிலையில், ஷ்ரத்தா கபூர் 9.27 கோடி ஃபாலோயர்ஸ்களை பெற்றுள்ளார். 27 கோடி ஃபாலோயர்களுடன் அசைக்க முடியாத இடத்தில் விராட்கோலி முதல் இடத்தில் உள்ளார்..

பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் ஸ்ட்ரீ 2. இப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ஸ்ட்ரீ படத்தின் இரண்டாம் பாகமாக எடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆன பாலிவுட் படங்களில் அதிக வசூலைக் குவித்து பாக்ஸ் ஆஃபீஸ் வின்னராக இந்தப் படம் மாறியுள்ளது. இந்தப் படத்தின் வெற்றி மூலம், இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார் நடிகை ஷ்ரத்தா கபூர்.

Read more ; தவெக கொடிக்கம்பம் நடுவதற்கு செக் வைத்த போலீஸ்..!! – எச்சரிக்கை விடுத்த விஜய்!!

Tags :
Advertisement