தந்தை மறைவிற்கு பிறகு அவர் வாங்கிய கடனை மகன் கட்ட வேண்டுமா..? சட்டம் சொல்வது என்ன..?
நம்மில் பலர் குடும்பத்தின் தேவைக்காக வீட்டுக்கடன் வாங்கி வீடு வாங்குவது, வாகனக் கடன் வாங்கி கார் வாங்குவது என எல்லாவிதமான ஏற்பாடுகளையும் செய்கிறோம். தந்தையின் பெயரில் கடன் வாங்கி அவர் இறந்துவிட்டால் என்ன செய்வது…? கடன் வாங்கியவர் இறந்த பிறகு அந்த கடனை திருப்பிச் செலுத்துவதற்கு யார் பொறுப்பு..? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2005ஆம் ஆண்டு இந்து வாரிசு உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அந்த திருத்தத்தின் படி, அப்பா வங்கியில் கடன் வாங்கி இறந்துவிட்டால் அந்த வங்கி கடனை அவரது மகன் கட்ட வேண்டும் என்ற அவசியமில்லை. வங்கி மகனிடம் கடனை கேட்க எந்த உரிமை இல்லை. அப்பா வங்கிக் கடன் வாங்கும்போது அவருக்கு ஜாமீன் கையெழுத்து போட்டவர் தான் அப்பாவின் கடனுக்கு பொறுப்பாளர். அல்லது ஏதேனும் சொத்துக்கள் மீது அப்பா அடமானம் வைத்திருந்தால் அந்த சொத்துக்களை விற்று கடனை எடுத்து கொள்ள வங்கிக்கு உரிமை இல்லை. ஆனால் வாரிசுதாரர்களிடம் வங்கிகள் கடனை கேட்கக்கூடாது என்றுதான் சட்டம் கூறுகிறது.
தனியார் நிறுவனத்தில் தந்தை கடன் வாங்கி இருந்தால், அவர்களுக்கும் இதே விதி பொருந்தும். அப்பாவின் சொத்துக்களை மகன் எந்த அளவுக்கு பெறுகிறாரோ அந்த சொத்துக்கள் மீது ஏதாவது கடன் இருந்தால் மட்டுமே மகன் பொறுப்பாவார் என இந்து வாரிசு உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Read more ; சடலத்துடன் உடலுறவு வைத்துக் கொள்வது குற்றமாகாது..!! உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!