For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து.!?

06:47 PM Feb 23, 2024 IST | 1newsnationuser5
இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து
Advertisement

பொதுவாக நாம் வீட்டில் சமைக்கும் உணவுகளாக இருந்தாலும், ஹோட்டலில் வாங்கி உண்ணும் உணவுகளாக இருந்தாலும் ஒரு சில உணவுகளை நீண்ட நேரம் வைத்திருந்து சூடு பண்ணி சாப்பிடுவது பல வீடுகளில் வழக்கமாக இருந்து வருகிறது. உணவுகளை தேவைக்கேற்ப சமைத்து சூடாக சாப்பிட்டால் தான் அந்த உணவில் உள்ள ஊட்டச்சத்து நம் உடலுக்கு முழுமையாக கிடைக்கும்.

Advertisement

ஆனால் முந்தைய நாள் சமைத்த உணவுகளை அடுத்த நாள் சூடு பண்ணி சாப்பிடுவது உடலுக்கு மிகப்பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். குறிப்பாக ஒரு சில உணவுகளை சூடு படுத்துவதால் அவை விஷமாக மாறி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.  அவை என்னென்ன உணவு பொருட்கள் என்பதை குறித்து பார்க்கலாம்?

1. முட்டை - முட்டையை வேக வைத்தோ அல்லது வறுத்தோ உடனடியாக சாப்பிட்டு விட வேண்டும். இவ்வாறு முட்டையை மீண்டும் சூடுப்படுத்தி சாப்பிடுவது உடலுக்கு தீமையை ஏற்படுத்துவதோடு உயிருக்கு ஆபத்தாகும்.
2. உருளைக்கிழங்கு - சமைத்த உருளைக்கிழங்கை சூடுபடுத்தி சாப்பிடும் போது அதில் உள்ள பாக்டீரியாக்கள் மீண்டும் உயிர்பெற்று நம் உடலில் கேடு விளைவிக்கும்.
3 கீரை - கீரையை சூடுபடுத்தும்போது இதில் நைட்ரேட் வாயு உருவாகுவதால் உடலுக்கு விஷமாக மாறிவிடும் அபாயம் ஏற்படுகிறது.
4. சிக்கன் - சிக்கனை சூடுபடுத்தி சாப்பிடும் போது அதில் உள்ள புரதம் அதிகரித்து உடலில் அதிகப்படியான புரதம் கலக்கிறது. இது உடலுக்கு கேடு விளைவிக்கும்.
5. பீட்ரூட் - பீட்ரூடிலும், கீரையை போன்று நைட்ரேட் சத்து நிறைந்துள்ளதால் இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.
6. காளான் - இதில் புரோட்டின் சத்து அதிகமாக இருப்பதால் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் போது உடலுக்கு செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். மேலும் எந்த உணவாக இருந்தாலும் சமைத்த உடனே சூடாக உண்ணும் போது உடலுக்கு நன்மையை தரும்.

English summary : reheating foods are not good for health

Read more : மூல நோய் ஒரே வாரத்தில் குணமாக வாழைப்பழத்துடன் இதை கலந்து சாப்பிட்டு பாருங்கள்.!?

Tags :
Advertisement