தயிருடன் இந்த உணவுகளை கண்டிப்பாக சேர்த்து சாப்பிடக்கூடாது.? என்னென்ன உணவுகள் தெரியுமா.!?
பொதுவாக நாம் சாப்பிடும் உணவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் ஊட்டச்சத்துக்களை கொண்டதாகவே இருக்கிறது. ஆனால் நாம் ஒரு சில உணவுகளை மற்ற உணவு பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். குறிப்பாக தயிருடன் ஒரு சில உணவுப் பொருட்களை சேர்த்து சாப்பிடுவதால் பல பாதிப்புகள் உடலில் ஏற்படுகின்றன. இதைக் குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?
1. தயிருடன் மாம்பழத்தை சேர்த்து சாப்பிடுவது வயிற்று வலி, வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.
2. மீனுடன் தயிர் சேர்த்து சாப்பிடும் போது ஒரு சிலருக்கு அலர்ஜி ஏற்படுகிறது.
3. உளுந்துடன் தயிர் சேர்த்து சாப்பிடக்கூடாது.
4. தயிர் பொருட்கள் சாப்பிட்ட பிறகு உடனடியாக டீ, காபி போன்றவற்றை குடிப்பதை தவிர்க்கவும்.
5. எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிட்டவுடன் தயிர் சாப்பிடுவது நல்லதல்ல.
6. தயிருடன் பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ் வகைகளையும், உலர் பழங்களையும் சேர்த்து சாப்பிடக்கூடாது.
7. தயிருடன் வாழைப்பழம் சேர்த்து சாப்பிடுவதை தவிர்ப்பது உடல் நலத்திற்கு நன்மையை ஏற்படுத்தும்.
8. தயிர் சாப்பிட்டுவிட்டு எள்ளில் செய்த உணவு பொருட்களை சாப்பிடக்கூடாது.
9. ஒரு சிலர் பிரியாணியுடன் தயிர் வெங்காயம் சேர்த்து சாப்பிடுவார்கள் ஆனால் இவ்வாறு சாப்பிடுவது நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம் போன்றவற்றை ஏற்படுத்தும்.
இவ்வாறு தயிருடன் குறிப்பிட்ட உணவுப் பொருட்களை சேர்த்து சாப்பிடும் போது உடலில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.